ஒரு நியமனத்துக்கே வழியில்லை, இதுல நாலு பேரா? டென்ஷனில் புலம்பும் பா.ஜ.க.வினர்!

தமிழிசை சௌந்தர்ராஜன் தெலுங்கானா கவர்னராக போன பிறகு, தமிழகத்திற்கு தலைவர் என்று யாரையும் நியமிக்க முடியாமல் தடுமாறி நிற்கிறது பா.ஜ.க.


இப்போது தலைமை பதவிக்கு வானதி சீனிவாசனுக்கும் ஹெச்.ராஜாவுக்கும் கடும் போட்டி நிலவுவதாக கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில் திடீரென நான்கு பேரை பொறுப்புத் தலைவர்களாக நியமனம் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகின. இவர்கள் நான்கு பேருமே பொறுப்புத் தலைவர்களாக செயல்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இல. கணேசன், பொன். ராதாகிருஷ்ணன், எம்.ஆர். காந்தி, வானதி சீனிவாசன் ஆகியோர் நியமனம் செய்யப்படுவதாக சொல்லப்பட்டது. அந்த செய்தி வெளியானதுமே பின்னாடியே அது வதந்தி என்றும் செய்தி வெளியானது.

வேண்டுமென்றே இந்த செய்தியை பரப்பிவிட்டது அந்த நால்வரில் ஒருவர்தானாம். அப்படியாவது உடனே தலைவர் பதவியை போடுவார்களா என்ற நல்லெண்ணம்தானாம் அவருக்கு. நல்லாயிருக்குப்பா உங்க டீட்டெய்லு.