தமிழக பாஜக தலைவர் பதவி! தமிழிசையிடம் அமித் ஷா சொன்ன முக்கிய தகவல்!

தமிழக பாஜக தலைவர் பதவி தொடர்பாக அமித் ஷா கூறிய தகவலால் தமிழிசை மிகுந்த அதிர்ச்சியில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாஜக கூட்டணி படு தோல்வி அடைந்தது. போட்டியிட்ட 5 தொகுதிகளிலும் பாஜக வேட்பாளர்கள் தோல்வி அடைந்தனர். தூத்துக்குடியில் போட்டியிட்ட தமிழிசையும் லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார். மேலும் கடந்த 5 ஆண்டுகளாக பாஜக தலைவர் பதவியில் தமிழிசை நீடித்து வருகிறார். சட்டப்பேரவை தேர்தல்,

நாடாளுமன்ற தேர்தல் ஆகியவற்றில் அவர் தலைமையில் எதிர்கொண்ட பாஜகவிற்கு தோல்வியே கிடைத்தது. மேலும் பாஜகவில் சில மாற்றங்களை செய்து தமிழகத்தில் கட்சியை வலுப்படுத்த அமித் ஷா வியூகம் வகுத்துள்ளார்.இதற்காகத்தான் டெல்லியில் இன்று ஆலோசனை கூட்டத்தையே  அமித் ஷா கூட்டினார். இந்த கூட்டத்தில் தமிழிசை சவுந்திரராஜன் பங்கேற்றார்.

அப்போது அவரிடம் பேசிய அமித் ஷா உங்கள் பொறுப்பை நீங்கள் வேறு ஒருவரிடம் கொடுப்பதற்கான நேரம் வந்துவிட்டதாக கூறியுள்ளார். இதனால் முதலில் அதிர்ச்சி அடைந்த தமிழிசை பின்னர் சமாளித்துக் கொண்டதாக சொல்கிறார்கள். கட்சி என்ன கட்டளை பிறப்பித்தாலும் செய்து முடிக்க தயாராக இருப்பதாக தமிழிசை கூற மிக்க மகிழ்ச்சி என்று கூறிவிட்டு அமித் ஷா அங்கிருந்து புறப்பட்டுள்ளார்.

விரைவில் தமிழக பாஜக தலைவர் பதவியில் இருந்து தமிழிசை மாற்றப்பட உள்ளது இதனால் உறுதியாகியுள்ளது. மீண்டும் அந்த பதவிக்கு பொன்னார் காய் நகர்த்துவதாக சொல்கிறார்கள்.bஇதே போல் ஹெச்.ராஜா, வானதி சீனிவாசன், கருப்பு முருகானந்தம் ஆகியோரும்தமிழக பாஜக தலைவர் பதவிக்கு குறி வைத்துள்ளனர்.

இருந்தாலும் இதுவரை தமிழக அரசியலில் பெரிய அளவில் பரிட்சயம் இல்லாத புதுமுகம் ஒருவரை அமித் ஷா தலைவராக அறிவிப்பார் என்கிறார்கள்.