மராட்டியத்தில் மொத்தமுள்ள 288 தொகுதிகளில் பா.ஜ.க. 100க்கும் மேற்பட்ட தொகுதிகளிலும் சிவசேனா 50க்கும் மேற்பட்ட தொகுதிகளிலும் வெற்றியை நோக்கி செல்கிறது.
மராட்டியத்தில் மீண்டும் ஆட்சி அமைக்கிறது பா.ஜ.க. கூட்டணி! காங்கிரஸ்க்கு வெற்றிகரமான தோல்வி!
காங்கிரஸ் கட்சி 66 தொகுதியில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. இந்த நிலைமைதான் நீடிக்கும் என்று தெரியவந்துள்ளது. அதனால் மீண்டும் மராட்டியத்தில் பா.ஜ.க. மற்றும் சிவசேனா கூட்டணி ஆட்சி அமைவது உறுதியாகியுள்ளது. கருத்துக்கணிப்புகளில் காங்கிரஸ் கட்சிக்கு 40 தொகுதிகளுக்கும் குறைவாகவே கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் கூடுதலாகவே வெற்றிபெறும் நிலைமை உள்ளது. அதனால் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றிகரமான தோல்விதான். இப்போதைய நிலவரப்படி பா.ஜ.க. கூட்டணி 169 தொகுதிகளிலும் காங்கிரஸ் கூட்டணி 66 தொகுதிகளிலும் முன்னணி பெற்றுள்ளன.