கைகளில் துப்பாக்கி! முழு போதை! அரைகுறை ஆடையுடன் எம்எல்ஏ குத்தாட்டம்!

உத்தரகண்ட் மாநிலத்தில் பாஜக எம்.எல் ஏ குன்வர் பிரணவ் சிங் என்பவர் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் பத்திரிகையாளர் சந்திப்பில் பத்திரிக்கையாளர்களிடம் தரக்குறைவாக நடந்து கொண்டதற்காக கட்சிப் பொறுப்பில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.


இந்நிலையில் அவர் தனது நண்பர்களுடன் மது விருந்து ஒன்றில் வாய் மற்றும் கைகளில் துப்பாக்கிகளை பிடித்தபடி பாலிவுட் பாடல் ஒன்றுக்கு நடனமாடி உள்ள வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரப்பப்பட்டு வருகிறது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் பாஜக எம்.எல்ஏ வான குன்வர் பிரணவ் சிங் என்பவர் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.அதற்கான காரணம் அவர் ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றை பத்திரிக்கையாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு அச்சுறுத்தும் விதமாக பதில் கூறியதாகவும் அவர் கேட்ட கேள்விக்கு தரக்குறைவாக பதில் கூறிய நிலையில் அவரை கட்சித் தலைமையிடம் 3 மாதத்துக்கு முன்னர் சஸ்பெண்ட் செய்துள்ளது.

இந்நிலையில் அவர் ஆளும் பாஜக அரசை பற்றி தரக்குறைவாக பேசுவது மற்றும் தனது வலைத்தள பக்கத்தில் தரக்குறைவாக பதிவிடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார் .இதையடுத்து அவரது நண்பர் ஒருவரின் மது விருந்துக்கு சென்ற குன்வர் பிரணவ் சிங் மது அருந்திவிட்டு போதையில் துப்பாக்கிகளை தனது வாயில் கடித்தபடி கையில் இரண்டு துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு உற்சாக நடனம் ஆடியுள்ளார்.

இதனை வீடியோவாக பதிவு செய்தார் பலர் அதனை சமூக வலை தளங்களில் வெளியிட்டுள்ளனர். இந்நிலையில் உத்தரகாண்ட் அரசு தரக்குறைவாக பேசிய நிலையில் பாஜக அரசு இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது.