கேக்.. கேண்டில் லைட்..! பிறந்த நாள் கொண்டாட தயாரான இளம் பெண்..! ஆனால் அங்கு நேர்ந்த பரிதாபம்! வைரல் வீடியோ!

ஒவ்வொருவரும் பிறந்த நாள் கொண்டாடும்போது மனதில் மறையாத அளவுக்கு ஏதாவது சம்பவம் நடக்கும். ஒவ்வொரு வருடமும் பிறந்த நாள் கொண்டாடும்போது உற்றார், உறவினர்கள், நண்பர்கள் தொலைபேசியிலும், முகநூலிலும் நேரிலும் வாழ்த்து தெரிவிப்பது அனைவருக்கும் சந்தோஷமான விஷயமே.


சிலர் எத்தனை வயதானாலும் தங்களது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடி மகிழ்வர். நண்பர்களும் பிறந்த நாள் விழாவில் பங்கேற்று பரிசுகள் வழங்கி வாழ்ததுக்களை தெரிவிப்பர். 

இந்த வீடியோவில் பிறந்த நாள் கொண்டாடும் பெண் செய்த காரியத்தை பார்த்தால் நீங்களே அதிர்ச்சி ஆகிவிடுவீர். பிறந்த நாளுக்கு வெட்டுவதற்காக மேஜையில் கேக் வைக்கப்படுகிறது. ஒரு பெண் மெழுகுவர்த்தி ஏற்றிக் கொண்டிருக்கிறார். பின்னர் பிறந்த நாள் கொண்டாடும் அந்த பெண் கையில் பாப்பர்ஸ் எடுக்கிறார்.

அதை செயல்படுத்தும்போது திடீரென வெடித்து சிதறுகிறது. இதனால் பெண் அலறியடிக்க, மற்றவர்கள் சிரிக்கிறார்கள். பின்னர் அந்த பெண்ணும் சற்று சுதாரித்துக் கொண்டு பின்னர் அதிர்ச்சியில் இருந்து மீண்டு சிரிக்கத் தொடங்கிறார்.