நாட்டுல என்னதான் நடக்குது? 15 ஆயிரம் ரூபாய் ஸ்கூட்டர் ஓட்டுனதுக்கு 23 ஆயிரம் ஃபைன்? டெல்லி லொள்ளு!

புதிய வாகன சட்டத்தில் தமிழ்நாட்டில் ஒரு லாரிக்காரர் 10000 ரூபாய் ஃபைன் கட்டிய செய்தி தந்த அதிர்ச்சி மறையும் முன் டெல்லி போலீஸ் ஒரு பழைய ஸ்கூட்டருக்கு 23 ஆயிரம் ஃபைன் போட்டு நாடெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.


மாட்டிக்கொண்ட அந்த துரதிர்ஷ்டசாலியிடம் அந்த 15000 மதிப்புள்ள பழைய ஸ்கூட்டரைத் தவிர எதுவுமே இல்லை.புதிய சட்டப்படி போக்குவரத்து குற்றங்களுக்கு விதிக்கப்படும் அபராதம் 50% முதல் நூறு சதவீதம் வரை உயர்ந்து விட்ட நிலையில் ட்ராஃபிக் போலீசாரிடம் மாட்டி இருக்கிறார் தினேஷ் மதன்.

அவரிடம் ஹெல்மெட் இல்லை,வண்டிக்கு ஆர்.சி புத்தகம் இல்லை,ஓட்டுனர் உரிமம் இல்லை, இன்சூரன்ஸ் இல்லை,சுற்றுச்சூழல் பாதுகாப்பு சர்டிபிகேட் இல்லை. போலீஸ் மடக்கிய உடன் வாட்ஸ்சப் மூலம் வீட்டிலிருந்து வாகனப்பதிவு புத்தகத்தின் காப்பியை வாங்குவதற்குள் அந்த கடமை தவராத காவலர் , புதிய சட்டப்படி அவர் கட்ட வேம்டிய அபராத தொகையை பிரிண்ட் செய்து கொடுத்து விட்டார்.

அதன்படி லைசன்ஸ் இல்லாமல் வண்டி ஓட்டியதற்கு 5000,ஆர்.சி புத்தகம் இல்லாததற்கு 5000,இன்சூரன்ஸ் இல்லாமல் வண்டி ஓட்டியதற்கு 2000,மாசுக்கட்டுப்பாட்டு விதிகளை மீறியதற்கு 10000,கடைசியாக ஹெல்மெட் இல்லாமல் வண்டி ஓட்டியதற்கு 1000 என்று ,மொத்தம் 23000 அபராதம் விதித்து அச்சிட்ட ரசீதைக் கொடுத்துவிட்டார்.

அநேகமாக இந்தியப் போக்குவரத்து சட்டங்களின் படி அதிக அபராதம் செலுத்தியவர் என்கிற பெருமையை தினேஷ் மதனும்,அதிகபட்ச அபராதம் விதித்தவர் என்கிற பெருமையை அந்த போக்கு வரத்து காவலரும் பெறக்கூடும்.இத்தனைக்கும் பிறகு , செய்தியாளர்களிடம் பேசிய தினேஷ் மதன்,அந்த காவலர் சற்று பொறுத்திருந்தால் எனது வாகன உரிமத்தின் காப்பியை வாட்சப்பில் வரவழைத்து காட்டி இருப்பேன்.

அதற்குள் அவர் எனக்கு 23000 அபராதம் விதித்து விட்டார்,ஆனால் எனது ஸ்கூட்டர் இன்றைய மார்க்கெட் நிலவரப்படி 15000க்கு மேல் விலை போக வாய்ப்பில்லை என்று தெரிவித்து இருக்கிறார். இவளவு பெரிய தொகையை அபராதமாக கட்டப்போகும் ஓட்டுனர்களை , போக்குவரத்து போலீசார் குறைந்தபட்ச மரியாதையுடனாவது நடத்துவார்களா என்பதே இந்திய இருசக்கர வாகன ஓட்டிகளின் ஒரே எதிர் பார்ப்பாக இருக்கிறது.