திட்டமிட்ட விபத்து! உதவுவது போல் நடிப்பு! 106 பவுன் தங்கம் அபேஸ்! கோவை சம்பவம்!

கோவை அருகே உள்ள நகை பட்டறையில் இருந்து கொண்டு செல்லப்பட்ட 106 சவரன் தங்க நகைகளை,மோட்டார் பைக்கில் வந்தவர்கள் திருடிச் சென்றுள்ளனர்.


கோவை கடைவீதி பகுதியில் சுரேஷ் தங்க நகை செய்யும்  பட்டறை நடத்தி வருகிறார். அங்கு வேலை செய்யும் ராமமூர்த்தி. கிட்டத்தட்ட  106 சவரன் மதிப்புள்ள தங்க நகைகளை பெற்று, தாராபுரத்தில் உள்ள நகைக்கடையில் ஒப்படைக்க சென்றுள்ளார்.

காந்திபுரம் பேருந்து நிலையம் நோக்கி ராம்நகர் வழியாக மோட்டார் பைக்கில் சென்றபோது, ஒருவர் வேண்டும் என்றே அவரது இருசக்கர வாகனத்தில் மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

நிலைதடுமாறி  கீழே விழுந்த ராம மூர்த்தியை, பின்புறமாக  மற்றொரு வாகனத்தில் வந்த இருவர் விபத்து நடந்ததை கண்டு ராமமூர்த்திக்கு உதவுவது போல் நடித்துள்ளனர் மேலும்  அவர்களுடன் விபத்தை ஏற்படுத்திய நபரும் அவருக்கு உதவிவது போல நடித்துள்ளனர்.

இந்த நிலையில்,  ராமமூர்த்தியை பொதுமக்கள் அருகில் உள்ள கடைக்கு அழைத்துச் சென்று சிறிது நேரம் அமரவைத்து ஆசுவாசப்படுத்திய சமயத்தில், ராமமூர்த்திக்கு உதவுவதுபோல் பாவனை செய்தவர்களில் ஒருவன், அவரிடம் இருந்த நகைப்பையை சத்தமின்றி தூக்கிக்கொண்டு, வெளியே நிறு கொண்டிருந்த பைக்கில் தப்பி சென்றனர்.

இந்த  காட்சிகள் அருகில் இருந்த சி.சி.டி.வி கேமராவில் பதிவாகி இருந்தது,  இருசக்கர வாகனத்தில் வந்த மூவரும் திட்டமிட்டு இந்த கொள்ளை சம்பவத்தை நிகழ்த்தியுள்ளதும் அம்பலமானதை அடுத்து, வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார், கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய  தேனியை சேர்ந்த ராஜா என்பவனை கைது செய்து மற்றவர்களை குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.