தமிழகத்தில் சில நாட்களுக்கு முன்னதாக அனைவரது மனதையும் உலுக்கும் விதமாக அரங்கேறிய பேனர் விபத்து போலவே தெலுங்காணவில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.
அண்ணனுடன் ஆசையாக பைக்கில் ஏறிய தங்கை! அடுத்த சில நிமிடங்களில் அரங்கேறிய பயங்கரம்! நெஞ்சை உலுக்கும் சிசிடிவி!

தெலுங்கானாவை சேர்ந்த காவியா ( 23 வயது ) ரயில்வே தேர்வு எழுத தனது சகோதரன் சிவன் சாயுடன், ஹைதராபாத் நெல்கொண்டா சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். சம்பவத்து அன்று காலை 7:30 மணியளவில் சகோதரியுடன் சென்ற சிவன் முன்னதாக சென்ற பேருந்தை முந்தி செல்ல முயன்றதாக கூறப்படுகிறது.
ஆனால் எதிர்ப்பாராத விதமாக நிலைத்தடுமாறிய சிவன் சாய் பைக்கில் இருந்து கீழே விழ, பின்னால் வேகமாக வந்த பேருந்து அவர்கள் மீது ஏறி விபத்துக்குள்ளாகினர். துர்திஷ்டவசமாக விழுந்த வேகத்தில் காவ்யா தலை மீது பேருந்தின் பின் சக்கரம் ஏறியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார், மேலும் காயங்களுடன் சிவன் சாய் அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தமிழகத்தில் நடந்தது போலவே துயர சமப அரங்கேறியுள்ளது, இது குறித்த சி சி டி வி காட்சிகள் வெளியாகி சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.