திருமணமாகி வெறும் 6 மாதம் தான்..! புதுமனைவியை தவிக்கவிட்டு நண்பருடன் சென்ற புது மாப்பிள்ளைக்கு ஏற்பட்ட பயங்கரம்!

ஈரோடு மாவட்டத்தில் திருமணமான ஆறே மாதத்தில் இளைஞர் ஒருவர் விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.


ஈரோடு மாவட்டம் வாசுதேவநல்லூர் அடுத்த புளியங்குடியில் முத்துக்குமார் செல்போன் கடையில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கடந்த 6 மாதத்திற்கு முன்தான் திருமணம் நடைபெற்றது. இவரும் இவரது நண்பர் செல்வகுமாரும் தேவிபட்டினத்தில் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மோட்டார் பைக்கில் சென்றுகொண்டிருந்தனர்.

இவர்கள் வாசுதேவநல்லூர் அம்பேத்கர் சிலை அருகே வரும்போது சைக்கிளில் வந்த ராமர் என்பவர் திடீரென குறுக்கீட்டுள்ளார். அவர் மீது இருசக்கர வாகனம் மோதியதில் நிலைதடுமாறி விழுந்த முத்துக்குமார் பலத்த காயம் அடைந்தார். பின்னர் முத்துக்குமாரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிவகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் செல்வக்குமார் மற்றும் ராமருக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த வாசுதேவநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் அந்தோணி தலைமையில் போலீசார் விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்தனர். விபத்தில் உயிரிழந்த முத்துக்குமாரின் உடலை பார்த்து அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. சைக்கிளில் சென்றவர் அஜாக்கிரதை திருமணமான 6 மாதத்தில் கணவனை இழந்துள்ளார் மனைவி.