துப்பாக்கி முனையில் இளைஞனை மிரட்டி தாலி கட்டவைத்த கொடுமை... திருமணத்தில் திடீர் திருப்பம்

பீகார் மாநிலத்தில் துப்பாக்கி முனையில் ஒரு வாலிபருக்கு பெண்ணுடன் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் அந்த நபர் அளித்த புகாரின் பேரில் விசாரித்த நீதிபதி அந்த திருமணம் செல்லாது என தீர்ப்பளித்துள்ளது.


பீகார் மாநிலம் பாட்னாவில் வசித்து வருபவர் வினோத் இவர் அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அவர் கடந்த 2017 ஆம் ஆண்டு தனது சொந்த ஊரில் நடந்த திருமண நிகழ்ச்சிக்காக பாட்னா ரயிலில் ஏறி தனது சொந்த ஊருக்கு சென்றுள்ளார். பின்னர் அங்கு திருமணத்தை முடித்து திரும்ப தனது பணிக்கு திரும்பியுள்ளார்.

இந்நிலையில் அவர் ஒரு வாரமாகியும் பணிக்கு வராத நிலையில் வினோத் குமாரின் வீட்டில் அவரை தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அவரை காணவில்லை எனவும் போலீசில் புகார் அளித்து போலீசாரும் அவரை தீவிரமாக தேடிவந்தனர். இந்நிலையில் வினோத் என்பவரின் சகோதரர் சஞ்சய்க்கு ஒரு போன்கால் வந்துள்ளது.

அதில் உன் சகோதரன் வினோத்திற்கு திருமணமாகி அவர் தனது மனைவியுடன் வசித்து வருகிறார் என்று கூறிவிட்டு அந்த போனை கட் செய்துள்ளார். 

இந்நிலையில் அந்த நபர் சொன்ன பகுதிக்கு சென்று பார்த்தபோது வினோத் கைதியாக அவர்களது வீட்டில் அடைக்கப்பட்டு வைத்திருந்தது தெரியவந்தது. இந்நிலையில் இதுகுறித்து அவரிடம் கேட்டபோது : ரயிலில் வரும்போது அடையாளம் தெரியாத நபர்கள் தன்னை கடத்தியதாகவும் கடத்தி தனக்கு விருப்பமில்லாத பெண்ணுடன் திருமணம் செய்து வைக்கப்போவதாக அறிவித்தனர்.

நான் ஒப்புக் கொள்ளாத நிலையில் என்னை அடித்து துன்புறுத்தும் ,துப்பாக்கி முனையில் அப்பெண்ணிற்கு தாலி கட்ட வைத்தனர். இதையடுத்து வினோத் கண்ணீருடன் அப்பெண்ணிற்கு தாலி கட்டிய புகைப்படங்களை காட்டியுள்ளார். இந்நிலையில் அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.

இந்நிலையில் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இந்த கட்டாய திருமணம் செல்லாது என உத்தரவிட்டு தீர்ப்பளித்துள்ளார்.