திருநங்கை, திருநம்பிகளுக்கு வாடகைக்கு வீடு தர மறுத்தால் சிறை தண்டனை! பீகார் அதிரடி!

பீகார் மாநிலத்தில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு வீடு தர மறுத்தால் வீட்டு உரிமையாளர்களுக்கு சிறை தண்டனை வழங்கப்படும் என அம்மாநில அரசு ஒரு புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.


இந்தியாவில் மூன்றாம் பாலினத்தவர்களை பாதுகாக்கும் வகையில் பல்வேறு சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.அதில் அவர்களுக்கென கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளை இந்திய அரசு ஏற்படுத்தித் தந்துள்ளது. இந்நிலையில் பல்வேறு பகுதிகளில் மூன்றாம் பாலினத்தை சேர்ந்த நபர்கள் சந்தேக கண்ணோட்டத்திலும் அவர்களை மக்கள் ஒதுக்கி வருவதையும் பார்க்க முடிகிறது.

கடந்த 2014 ஆம் ஆண்டு இந்திய உச்சநீதிமன்றம் மூன்றாம் பாலினத்தவர்களை ஒரு தனி பாலினமாக அறிவித்தது. இந்நிலையில் அவர்களுக்கென உரிமை மற்றும் பாதுகாப்பு குறித்த மசோதாவை 2018 ஆம் ஆண்டு இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் மூலம் கொண்டு வந்துள்ளது.

இதனடிப்படையில் தவறான கண்ணோட்டத்தோடு பார்த்து வந்த திருநங்கைகளுக்கு ஒரு அங்கீகாரம் கிடைத்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில் பீகார் மாநிலத்தில் திருநங்கை ஒருவர் தான் குடியிருக்க வீடு ஒன்றை வாடகைக்கு கேட்டுள்ளார்.  

இந்நிலையில் தரகர் மற்றும் வீட்டு உரிமையாளர் திருநங்கைக்கு வீடு தர மறுத்துள்ளனர். இந்நிலையில் ஆத்திரமடைந்த திருநங்கை இதுகுறித்து புகார் அளித்துள்ளார். இந்நிலையில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு வீடு வாடகைக்கு கொடுக்க மறுக்கும் உரிமையாளர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற நோக்கில் அவர்களுக்கு சிறை தண்டனை வழங்கப்படும் என பீகார் அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் திருநங்கைகளுக்கான ஒரு நல வாரியம் அமைத்து கொடுத்துள்ளது. பிகார் அரசு அந்த வாரியம் மூலம் அவர்களுக்கான தேவைகள் மற்றும் பணத்தேவைகள் வேலைவாய்ப்பு போன்ற நற்செயல்கள் அந்த வாரியத்தினால் அவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கப்படும் எனவும் பீகார் அரசு தெரிவித்துள்ளது.