மருமகளை சித்ரவதை செய்ததாக, நாட்டு மக்களுக்கு அரணாக விளங்கிய தலைவி பீகார் மாநில முன்னாள் முதல்வர ராப்ரிதேவி மீது முதல் தகவல் அறிக்கை எனப்படும் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது.
மருமகள் தலைமுடியை பிடித்து இழுத்து..! முன்னாள் முதலமைச்சர் மீது பகீர் புகார்! போலீசார் அதிரடி நடவடிக்கை!

தலைவி ஒருவர் பேசும் பேச்சை நம்பி, நமக்கு நிச்சயம் நல்லது செய்வார் என நம்பித்தான் கோடானு கோடி மக்கள் வாக்களிக்கின்றனர். அதே சமயம் நாட்டு மக்களுக்கு கடவுளாக தெரியும் தலைவர்கள் சிலர் வீட்டு பிரச்சனையில் கோட்டை விட்டுவிடுகின்றனர். ஒரு மருமகளை கூட மகளாக நினைக்கத் தெரியாதவருக்கா வாக்களித்தோம் என்ற மக்கள் புலம்பும் வகையில் சில சம்பவங்கள் அரங்கேறி விடுகிறது.
பீகார் மாநில முன்னாள் முதலமைச்சர் ராப்ரிதேவியின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ். இவருக்கும் ஐஸ்வர்யா ராய் என்பவருக்கும் திருமணம் செய்து வைக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த மாதம் ஊடங்கள் முன் திடீரென தோன்றிய மருமகள் ஐஸ்வர்யா ராப்ரி தேவி தன்னை கொடுமைப்படுத்துவதாக கூறி கதறி அழுதார். மேலும் இதையடுத்து ஐஸ்வர்யா-தேஜ் பிரதாப் யாதவ் தம்பதி இருவரும் மனமொத்து பிரிய முடிவு செய்து விவாகரத்து வழக்கு தொடரப்பட்டது. ஐஸ்வர்யா ராயை விவாகரத்து செய்ய தேஜ் பிரதாப் யாதவ் தாக்கல் செய்த மனு நீதிமன்ற நிலுவையில் உள்ளது
இந்த நிலையில் தலைமுடியைப் பிடித்து இழுத்து அடித்து மெய்காவலர்களால் வீட்டை விட்டு விரட்டி விட்டதாக புதிய புகாரை ராப்ரி தேவி மீது ஐஸ்வர்யா ராய் அளித்துள்ளார். இதை அடுத்து விசாரணை நடத்திய போலீசார், ராப்ரி தேவி மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர்.