விரை வீக்க அறுவை சிகிச்சைக்கு அரசு ஆஸ்பத்ரி சென்ற நபர்! டாக்டர்கள் செய்த விபரீத செயல்!

பீகார் மாநிலத்தில் விரைவீக்க சிகிச்சைக்காக வந்தவருக்கு தவறுதலாக காலில் அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


பிகார் மாநிலத்தில் கயாவில் உள்ள அனுராக் நாராயணன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அதே மாநிலத்தைச் சேர்ந்த ராம்பஜன் யாதவ் என்பவர் விரைவீக்க சிகிச்சைக்காக கடந்த சில தினங்களுக்கு முன்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

இதையடுத்து அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது காலில் அறுவை சிகிச்சை செய்துள்ளதாக அவர் உறவினர்கள் மற்றும் மகன் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் மருத்துவமனை ஊழியர்களின் அலட்சியத்தால் தான் இவ்வாறு மாற்றி அறுவை சிகிச்சை செய்துள்ளனர். என அவரது மகன் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்.

இந்நிலையில் செய்த தவறை ஒப்புக் கொள்ளாத மருத்துவமனை மருத்துவர்கள் அவரது காலில் பிளாரியா நோய்க்கான அறிகுறிகள் தென்பட்டதால் தான் நாங்கள் காலில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்துள்ளோம் மற்றும் அதன் பின்னர் விரைவீக்க அறுவை சிகிச்சை செய்ய உள்ளோம் என மருத்துவ வட்டாரங்கள் மழுப்பலாக பதில் அளித்துள்ளனர்.

இந்நிலையில் அவர் மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு அழைத்து சொல்லப்படாமல் மீண்டும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.