அலகு குத்தி அந்தரத்தில் தொங்கிய விஜய் ரசிகர்கள்..! பிகில் வெற்றிக்காக அரங்கேற்றிய விபரீத செயல்! வைரல் வீடியோ!

நடிகர் விஜயின் பிகில் திரைப்படம் நாளை மறுநாள் வெளியாக உள்ளது. இந்த நிலையில் பிரமாண்ட ஜேசிபி போன்ற வாகனம் ஒன்றில் அலகு குத்திக் கொண்டு விஜய் ரசிகர்கள் அந்தரத்தில் தொங்குவது போன்ற வீடியோ வெளியாகியுள்ளது.


பாரதிய ஜனதா கட்சியின் மாநில இளைஞர் அணிச் செயலாளர் வினோஜ் இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். பாடல் வெளியீட்டு விழாவில் தேவையில்லாதவற்றை பேசுவதற்கு பதில் உங்கள் ரசிகர்களை இது போல் முட்டாள்தனத்தில் ஈடுபட வேண்டாம் என்று கூறுங்கள் என்று விஜய்க்கு அந்த ட்வீட்டில் வினோஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆனால் இந்த வீடியோ தற்போது பிகில் படத்தின் வெற்றிக்காக விஜய் ரசிகர்கள் அலகு குத்திய நிகழ்ச்சி என்று சிலர் கூறுகிறார்கள். ஆனால் அதனை உறுதிப்படுத்த முடியவில்லை.