படுக்கைக்கு அழைத்தது யார்? பிக்பாஸ் போட்டியாளர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

ஐதராபாத்: டிவி சீரியலில் நடிக்க வாய்ப்பு வேண்டுமெனில், படுக்க வரும்படி அழைத்தார், என டிவி மேனேஜர் பற்றி தெலுங்கு நடிகை ஒருவர் பரபரப்பு புகார் கூறியுள்ளார்.


பிக் பாஸ் 3 என்ற பெயரில், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் டிவி நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதில், தெலுங்கு மொழியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் பங்கேற்றவர் ரோகிணி ரெட்டி. இவர், சமீபத்தில் அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். இந்நிலையில், தற்போது புதிய புகாரை கிளப்பியுள்ளார். 

ஆம். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளிவந்த பிறகு, டிவி சீரியல் ஒன்றில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததாகவும், ஆனால், அந்த டிவி சீரியலின் மேனேஜர் படுக்க வந்தால் மட்டுமே வாய்ப்பு உறுதிப்படுத்தப்படும் என்று தெரிவித்ததாகவும் ரோகிணி ரெட்டி கூறியுள்ளார். 

முதலில், தனக்கு இந்த விசயம் சரியாகத் தெரியாது என்று கூறிய அவர், சம்பந்தப்பட்ட மேனேஜர் இரட்டை அர்த்தத்தில் பேசியதால் அவர் என்ன சொல்கிறார் என்று புரிந்துகொள்ள சில நாள் அவகாசம் தேவைப்பட்டது எனவும் குறிப்பிட்டுள்ளார். பின்னர், அந்த வாய்ப்பை நிராகரித்துவிட்டதாக, ரோகிணி தெரிவித்துள்ளார். 

டிவி சீரியல் நடிக்க வரும் பெண்கள், இத்தகைய நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என, ரோகிணி ரெட்டி கேட்டுக் கொண்டுள்ளார்.