கதறி அழுத மீரா மிதுன் முகத்தில் மோகன் வைத்யா செய்த பகீர் சம்பவம்! அதிர்ச்சியில் பிக்பாஸ் வீடு!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடில் சாக்‌ஷி மற்றும் தர்ஷன் இணைந்து செய்த டாஸ்க்கில் அவர்களை உற்சாகப்படுத்தும் பொறுப்பு மீரா மிதுனுக்கு கொடுக்கபட்டது


இதனை அடுத்து மீரா அவர்கள் விளையாடிய போது அவரால் முடிந்த அளவு உற்சாகம் அளித்தார், இதற்கிடையில் அவர் போர்டு மீது கவனமாக இருங்கள் எனக் கூறியது விளையாட்டின் நெறிமுறைகளை மீறுவதாக சர்ச்சை எழுந்தது

இதனால் ஒட்டு மொத்த ஹவுஸ் மேட்ஸும் மீரா பக்கம் திரும்ப, மீராவும் கோவத்தில் தவறான வார்த்தையை விடுகிறார்.இதனால் கொதித்து போன கவின் சீறிப்பாய, நடுவில் காம்பில்மண்ட் கொடுக்க போய், வாங்கி கட்டினார் மோகன்.

இதனிடையே அதிருப்தி அடைந்த மோகன் மீராவை வைச்சு செஞ்சி விடுகிறார். மனமுடைந்த மீரா மன்னிப்பு கேட்க , மோகன் அவருக்கு முத்தம் கொடுத்து சமாதானம் செய்யும் செயல் பெரும் சர்ச்சையை கிளப்பியது.

மேலும் மீராவை மகளைப்போல பாவிப்பதாக சொல்லும் மோகன் அவரை முத்தம் கொடுத்த விதம் அவ்வளவு இயல்பாக இல்லை. மேலும் மீராவின் கன்னங்களை வருடியபடியே மோகன் வைத்யா கொடுத்த முத்தத்தால் நெட்டிசன்கள் அவரை வச்சி செய்கிறார்கள்.