என்னை மன்னித்துவிடுங்கள்! தர்ஷனிடம் பொது மேடையில் மன்னிப்பு கேட்ட கமல்!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் நாள் துவங்கியே சைலண்ட் மோடில் இருந்தவர், தர்ஷன் தான். பாத்திமா, வைத்யா என அப்பா , அம்மா வாக நினைத்து பாசமாக சுற்றி வரும் அன்பு.


வீட்டில் யாருக்கு உதவ வேண்டுமானாலும் முன்னால் நிற்க்க கூடிய குணம் என்றாலும் ஒருக் கட்டத்தில் அவர் பெரிதாக தனது குரலை பதிவு செய்வதில்லை என கமல் தர்ஷனுக்கு எதிராக தனது கருத்தை சொல்ல,

மற்றொரு பக்கம் தர்ஷன் கேப்டன் ஷிப் ஏற்க தகுதியானவர் என பாத்திமா பாபு உசுப்பி விட்டு போக, தன்னை மூழுசா கேப்டனாக நினைத்த தர்ஷன், அடுத்த கேப்டன் ஷிப் தேர்வில் தாமாக  முன் வருகிறார்.

அதிலும் அபிராமிக்காக அவரது மன ரீதியான அணுகுமுறைக்காக விட்டுக்கொடுப்பதும், ஒரு புறம் அவருக்காக வக்காலத்து வாங்கினாலும், வீட்டில் அடுத்த கேப்டன் ஷிப்புக்கான போட்டியில் வனிதா தனக்கு சாதகமாக விளையாடுவதும்,

வைத்யாவுக்கு எதிராக விளையாட்டை நிறுத்துவது என அவருக்கான பணியை செய்யும் போது மற்றவர்கள் வனிதா வாயைப்பார்த்த நேரத்தில் தர்ஷனின் குரல் வைத்யாவிற்க்காக ஓங்கி ஒலித்தது.

இதனை நேற்றைய நிகழ்ச்சியில் விவாதித்த கமல், தான் உங்கள் பற்றிய கணிப்பை தவறாக செய்து விட்டதாக பொது மேடையில் அனைவரது முன்னிலையிலும் தர்ஷனிடன் மன்னிப்பு கேட்ட தருணம் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது

அந்த தருணம், " மன்னிப்பு கேட்பவன் மனுஷன், மன்னிக்க தெரிந்தவன் பெரிய மனுஷன் " எனும் கமல் பட வரிகளை தான் நினைவுப்படுத்தியது.