பிக்பாஸ் 3: கமலின் ஓவர் பில்டப்புடன் வந்த அபிராமி ஐயர் யார் தெரியுமா?

பிக்பாஸ் சீசன் 3 வீட்டிற்குள் 6வது போட்டியாளராக நுழைந்துள்ள அபிராமி அய்யர் ஒரு பிரபலமான விளம்பர மாடல் ஆவார்.


அபிராமி அய்யரின் தந்தை சின்ன வயதிலேயே அவரது குடும்பத்தை தவிக்கவிட்டு சென்றவர். அதன் பிறகு அபிராமியை அவரது தாயார் தான் வளர்த்து வநதுள்ளார். குழந்தை பருவம் முதலே அபிராமிக்கு பரதநாட்டியத்தில் ஆர்வம் அதிகம்.

அபிராமியின் தோழியின் கணவர் மூலம் தான் முதல் முறையாக விளம்பர படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இதன் பிறகு பல்வேறு பிரபல நிறுவனங்களின் மாடலாக அபிராமி திகழ்ந்து வருகிறார். கலம்காரி, கல்யான் ஜூவல்லர்ஸ் நிறுவனங்களின் மாடலாக இருந்துள்ளார்.

தற்போது அஜித்துடன் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து வருகிறார். மேலும் களவு எனும் படத்தில் ஏற்கனவே அபிராமி அய்யர் நடித்துள்ளார். பரதநாட்டியம் மட்டும் அல்லாமல் வெஸ்டர்ன் டான்சிலும் இவர் அசத்துவாராம்.

கமல் மிகவும் பில்டப் கொடுத்து அபிராமியை அறிமுகம் செய்துள்ளார். அதற்கு காரணம் அவர் அய்யர் என்பது தான். கடந்த முறை ஜனனி அய்யர் போல் இந்த முறை அபிராமி அய்யர் போல.