3 குழந்தைகள் வயிற்றில் இருப்பதாக மகிழ்ந்திருந்த பெண்..! ஆனால் ஆப்பரேசன் செய்த டாக்டர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!

பீஜிங்: கர்ப்பிணி போல தோற்றமளித்த சீனப் பெண்ணின் கர்ப்பப் பையில் இருந்து ராட்சத கட்டி அகற்றப்பட்டுள்ளது.


சீனாவைச் சேர்ந்தவர் ஹூவாங். 59 வயதான இவருக்கு திருமணமாகவில்லை. இந்நிலையில், கடந்த சில மாதங்களாக, அவரது வயிறு கர்ப்பம் தரித்தது போல வீங்க தொடங்கியுள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பெண், உடனடியாக மருத்துவ பரிசோதனைக்குச் சென்றார். அங்கே அவரை பரிசோதித்த மருத்துவர்கள், முதலில் அவரது வயிற்றில் 3 குழந்தைகள் இருப்பதாக சந்தேகித்தனர்.

எனினும், தீவிர பரிசோதனைக்குப் பின்னர் அவரது கருப்பை முழுக்க, நீரால் சூழப்பட்ட மிகப்பெரிய புற்றுநோய்க்கட்டி ஒன்று இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். சுமார் 35 கிலோ எடையுள்ள அந்த கட்டியை அறுவை சிகிச்சைக்கு பிறகு வெளியே எடுத்தனர். அக்கட்டியின் உள்ளே நீர் மட்டுமே நிறைந்து காணப்பட்டது.  

இந்த கட்டி வயிற்றில் இருந்த காரணத்தால், ஹூவாங்கின் வயிற்றுப் பகுதியில் உள்ள சிறுநீரகம், கல்லீரல், பெருங்குடல், சிறுகுடல் உள்ளிட்ட உடல் உறுப்புகள் சரிவர இயங்க முடியாத நிலை இருந்தது. தற்போது அந்த கட்டியை உடைத்து, அதில் இருந்து, நீரை டியூப் மூலமாக, லிட்டர் கணக்கில் மருத்துவர்கள் வெளியே எடுத்து, ஹூவாங்கை காப்பாற்றியுள்ளனர்.