கிழித்து தொங்கவிட்ட சாண்டி மாஸ்டர்! வெக்ஸ் ஆகி ஒதுங்கிய மோகன் வைத்யா! பிக்பாஸ் பரிதாபங்கள்!

பிக் பாஸ் வீட்டின் புதிய டாஸ்க் ஆக 16 ஆம் நாள் கொடுக்க பட்ட வினோதமான டாஸ்க் தான் கொலை மற்றும் மயான அடக்கம் உள்ளிட்டவை , பார்ப்பதற்கு சற்று கிறுக்கு தனமாக இருந்தாலும் மக்கள் அதை ரசிக்கிறார்கள்.


ஆரம்பத்தில் பயங்கரமான கொலை குற்றவாளிகள் சிறையில் இருந்து தப்பியதாக கொடுக்கபடும் இண்டிரோ, பிறகு வனிதா தான அந்த அக்விஸ்ட் என்றதும் உறுதியாகிறது.இதில் முகைன் அவருக்கான உதவியாளர். இருவரும் சேர்ந்து அவ்வப்போது கொடுக்கபடும் இன்ஸ்டிரக்‌ஷன் படி வீட்டின் ஹவுஸ் மேட்ஸ் ஒவ்வொருவராக கொலை செய்ய வேண்டும்.

இடையில் சாண்டி தான் தனது நகைச்சுவை திறமை மூலமாக தீனிப்போட்டு வருகிறார். அதிலும் ஆவியாக மயானத்தில் இருக்கும் மோகன் வைத்தியாவை வேண்டும் என்றே வாரும் சாண்டி பாரபட்சம் இல்லாமல் எல்லோரையும் வச்சி செய்கிறார்.

கடுப்பான மோகன் சாண்டியை கிழிந்த வாயா என திட்டி தீர்க்கிறார். இருப்பினும் அடங்காமல் சாண்டி அட்டகாசம் செய்ய ஒருக் கட்டத்தில் வெறுத்து போய் அவரே கன்பியூஸ் ஆகிட்டாருன்னு நம்ம வடிவேலு சொல்றத போல மோகன் சிரிச்சு ரசிச்சிட்டு நகர்வது தான் இயல்பு.