பிக்பாஸ் வீட்டில் இடுப்பு மடிப்பு புகழ் ரம்யா பாண்டியன்! பற்றி எரியும் விஜய் டிவி!

பிக்பாஸ் வீட்டிற்குள் வைல்ட் கார்ட் என்ட்ரியாக ரம்யா பாண்டியனை அனுப்புவது குறித்த தீவிரமாக விஜய் டிவி ஆலோசித்து வருவதாக சொல்கிறார்கள்.


70வது நாள் முடிவில் பிக்பாஸ் வீட்டிற்குள் வைல்ட் கார்ர்ட் என்ட்ரியாக 2 பிரபலங்கள் செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. ராஜா ராணி செம்பா என்கிற அல்யா மனசா மற்றும் பூர்ணிமா என்கிற மாடல் பெயர் இதற்காக அடிபடுகிறது.

இந்த நிலையில் இடுப்பு மடிப்புடன் ரம்யா பாண்டியன் வெளியிட்ட போட்டோ சூட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியது. இளைஞர்கள் பலர் ரம்யா பாண்டியன் கிருக்கு பிடித்து சுற்றி வருகின்றனர்.

ஏராளமான முன்னணி ஊடகங்கள் கூட ரம்யா பாண்டியனை பேட்டி எடுத்து சென்சேசன் ஆக்கிவிட்டனர். இதற்கிடைய ஒரு பேட்டியில் பிக்பாஸ் அழைப்பு வந்தால் செல்லத் தயார் என்று ரம்யா கூறிவிட்டார்.

இதனால் ரம்யாவை எப்படியும் பிக்பாஸ் வீட்டிற்குள் அழைத்துச் சென்றுவிடலாம் என்று விஜய் டிவி முக்கிய நிர்வாகிகள் ஆலோசித்து வருகின்றனர். ஆனால் இந்த விவகாரத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்தி வரும் என்டமோல் நிறுவனம் தான் இறுதி முடிவெடுக்க வேண்டும்.

எனவே விஜய் டிவி – எண்டமோல் நிறுவனங்கள் இடையே ரம்யா பாண்டியனை தொடர்பு கொள்வது குறித்து காரசார விவாதம் நடைபெற்று வருகிறதாம். இதனால் விஜய் டிவி பயங்கர பரபரப்பாக உள்ளது என்கிறார்கள்.