சின்னகவுண்டரான சித்தப்பு! யார் தொப்புளில் பம்பரம் விடப்போறாரோ? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

பிக் பாஸ் வீட்டின் நட்சத்திர போட்டியாளர்கள் தான் இடம் பெற முடியும் என்றாலும் கூட, மார்க்கெட் இல்லாத பல முகங்கள் பிரபலமானதும் இங்க நடக்க கூடியது தான்.


அந்த வகையில் பிக் பாஸ் வீட்ல தற்போது இருக்க கூடிய மக்கள் ரசிக்க கூடிய முகங்கள் யாருக்கும் முன்னதாக பெரிய அளவில் தெரியாத முகமாக லாஸ்லியா, தர்ஷன் உள்ளிட்டோர்.

அதிலும் நன்கு பரீட்சயமான சரவணன் பெரிதாக பெயர் சொல்லி கொள்ளும் அளவிற்கு ஆரம்பத்தில் பார்க்கபடவில்லை என்பது உண்மை தான், அவரும் அதற்கேற்றது போல, அமைதியாக இருக்கும் இடம் தெரியாமல், இருந்துட்டு போகணும் அப்படின்னு இருந்த நிலையில் அவரை மொத்தமாக மாற்றியது இந்த கிராம புற டாஸ்க்கான பாம்பு - கீரி பட்டி டாஸ்க் தான்.

அதில் அவருக்கு கொடுக்கபட்ட மைனர் பாத்திரத்தை ரசித்து வாழ்ந்தவர், அதுவரை அமைதியாக இருந்த மனுஷன் அடுத்து மீராவோடு போட்ட குத்தாட்டம் என தொடர்ந்து மக்கள்.கவனத்தை வெகு சுலபமாக ஈர்த்துள்ளார்.

அடுத்த கட்டமாக அவருக்கு கொடுக்கபட்டுள்ள சின்ன கவுண்டர் விஜயகாந்த் கேரெக்டரும் ரொம்ப நேர்த்தியாக செய்து கொண்டுள்ளார், அதிலும் நேற்று அவர் கடைவீதி பாட்டுக்கு போட்ட ஆட்டம் ரசிகர்களை குதூகலபடுத்தியது. ஆரம்பத்தில் ஓரமாக இருந்தாலும் தொடர்ந்து அமைதியாக முன்னேறி வருகிறார் சித்தப்பு - சரவணன்