மீராவைத் தேடி பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்த போலீஸ் கெடுபிடி..!

தென்னிந்திய மாடல் அழகியும், பிரபல நடிகையுமான மீரா மிதுன், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த 30 நாட்களாக பங்கேற்று வருகிறார். இவர் அழகி போட்டிகள் நடத்துவதாக பல பெண்களிடம் பண மோசடியில் ஈடுப்பட்டுள்ளார்.


இது குறித்த காவல் நிலையத்தில் புகார் அளித்த ஜோ மைக்கல் பிரவீன் , தொடர்ந்து மீரா குறித்த பல ஆவணக்களை வெளியிட்டுள்ளார். இந்த நிலையில் மீராவிற்க்கு கொடுக்கபட்ட தென் இந்திய அழகி பட்டமும்,

அவர் வயதை குறைத்து போலி சான்றுகள் கொடுத்து, வாங்கியது என தகவல் வெளிதானதை அடுத்து மீராவிற்க்கு கொடுக்கபட்ட பட்டமும் திரும்ப பெறபட்டது

இதற்கிடையில் மீரா மீதான வழக்குகளுக்கு பதில் அளிக்காமல் சாவகாசமாக அவர் பிக் பாஸ் வீட்டுக்குள் சாமர்த்தியமாக இருக்க , கடுப்பான காவல் துறை,

நேற்று எழும்பூர் நீதிமன்றம் மீரா முறையான பதில் அளிக்க கோரி உத்தரவிட்டதை அடுத்து, அதிரடியாக செம்பரம்பாக்கம் பகுதியில் உள்ள பிரமாண்ட பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்து,

அதிரடி விசாரணை மேற்க் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஏற்கனவே வனிதா சர்ச்சையில் போலீசார் நுழைந்தது அடுத்து மீராவும் அந்த இடத்தை பெற்றிருக்கிறார்.

என்ன இருந்தாலும் ஒரு வேளை கண்டெண்டஸ்டன் சுமாராக செயல்பட்டாலும் அவர்கள் மீதுள்ள புகார்களினால் ஆவது டி ஆர் பி எந்திவிடலாம என பிக் பாஸ் நிகழ்ச்சி இறங்கிவிட்டதா என கேள்வியை ஏற்படுத்துகிறது.