பிக்பாஸ் வீட்டிற்குள் செல்போன்! வனிதாவுக்கு செல்போன் கிடைத்தது எப்படி? பரபரப்பு தகவல்!

வழக்கமாக துவங்கிய 16 ஆம் நாள் வீட்டுக்குள் திடிரென செய்தி வாசிக்கபடுகிறது, அதாவது சிறையில் இருந்து பயங்கரமான கொலைக் குற்றவாளிகள் தப்பியதாகவும்,அதனால் ஆபத்து எனவும் கூறபடுகிறது.


இதற்க்கிடையில் காலையில் வீடிற்குள் மயானம் போன்ற செட்டப் போட்டு வைக்கபட்டிருந்தது, இதை அடுத்து ஒவ்வொருவராக அழைக்கபட்டு வீட்டிற்க்குள் நுழைந்த கொலையாளியை எப்படி தாக்க கேண்டும் என பயிற்சி பெற, டிவிஸ்ட்டாக வனிதாவிற்க்கு ஏற்றது போல வீட்டின் மறைவான கொலையாளியாக பிக் பாஸ் பொறுப்பு கொடுக்கிறார், அவருக்கு உதவ முகின் அவரது உதவியாளராக நியமிக்கபட்டதாக தெரிய வருகிறது.

இதில் உட்சபட்சமே வீட்டிற்க்குள் யாருக்கும் செல்போன் அனுமதி இல்லாத போது, வனிதா மற்றவர்களை கொலை செய்ய திட்டம் போடுவதற்க்கும்,  யார் என சொல்வதற்க்கும் அந்த செல் போனை அடிக்கடி பிக் பாஸ் அழைத்து பேசுகிறார். இதனை அறியாத மற்ற ஹவுஸ் மேட்ஸ் தேர்ச்சையாக அபியின் நடவடிக்கைகள் மீது சந்தேகம் கொள்கின்றனர், அதிலும் முகினுக்கு அபி மீது தான் சந்தேகம் எழுகிறது.

சாதகமாக பயன்படுத்திக்கொண்ட வனிதா அபியின் மீது மொத்த ஹவுஸ் மேட்ஸ் கவனததையும் திருப்பி விடுகிறார்,அதிலும் முதற் கட்டமாக ஷாக்சியை கொலை செய்ய வேண்டும் எனவும், அதற்கு வனிதா கேட்டதும் சாக்சி ஒத்துக் கொள்ளும் நம்பக தன்மையும் காண்போரை சிலிர்க்க வைக்கிறது எனலாம்.எது எப்படியானாலும் வனிதாவுக்கு ஏற்ற போஸ்ட் கொடுத்துள்ளதாக நெட்டிசன்கள் வறுத்து எடுத்து வருகின்றனர்.