கொலைகாரியான வனிதாவால் கவின் காதலி சாக்சிக்கு ஏற்பட்ட விபரீதம்! அதிர்ச்சிகரமாக முடிந்த பிக்பாஸ் டாஸ்க்!

வீட்டில் சந்தோஷமாக நாளை துவங்கிய ஹவுஸ் மேட்ஸ் கதவை திறந்து வெளியே பார்த்த போது தான் அங்கு மயானம் போன்ற செட்டப் செய்யபட்டதை கவனித்தனர்.


மேலும் அதில் பல வித்தியாசமான பொருட்களை கொண்டு வடிவமைத்து வைத்திருந்தனர், மேலும் திடீரென வீட்டிற்குள் கொலையாளிகள் ஊடுருவியதாகவும், அவர்கள் எந்த நேரத்திலும் யாரையும் கொலை செய்யலாம் எனவும் அறிவிப்பு வந்தது.

இப்படி குண்டை தூக்கி போட ஆடிப்போன ஹவுஸ் மேட்ஸ், எதுக்கும் தயாரக இருந்தனர். இதற்க்கிடையில் ஒவ்வொரு ஹவுஸ் மேட்ஸாக அழைத்து கொலையாளியை சமாளிக்க ஆயுதங்கள் கொடுக்கப்பட்ட நிலையில், வனிதாவுக்கு ஏற்றது போல கொலையாளி பதவியும், அவருக்கு உதவ முகினும் நியமிக்கபட, ரகசியமாக வனிதா கொலை செய்ய வேண்டிய நபர் குறித்தும், கொலை முறைகள் குறித்தும் சொல்லப்பட்டது.

முதற்கட்டமாக வனிதா கொலை செய்ய வேண்டியது ஷாக்சி எனவும், அவர் மேக்கப்பை கலைக்க செய்வதன் மூலமாக அதை நிறை வேற்ற கூற, சாமர்த்தியமாக நடந்த வனிதா சாக்‌ஷியை மேக்கப் துடைக்க வைத்து கொலை செய்து விடுகிறார். அதனை அடுத்து ஷாக்சியை வெள்ளை ஆடையில் மாட்டி, மையானத்தில் கொண்டு விட ஹவுஸ் மேட்ஸ் உடன் கவினும் ஆடிக்கொண்டு போனதும் அரங்கேறியது.