பெரிய மனுஷி பண்ற வேலையா இது? இதுக்கா வந்தீங்க? சிக்கிய கஸ்தூரி! சின்னாபின்னமாக்கிய வனிதா!

பிக் பாஸ் வீட்டிற்க்குள் பெரிய எதிர்ப்பார்ப்புடன் களம் இறங்கியவர் தான் நடிகை கஸ்தூரி, வெளியில் இருந்த வரை பெருவாரியாக பிக் பாஸ் நிகழ்ச்சி போட்டியாளர்களை வறுப்பதை வேலையாக கொண்டிருந்தவர்.


தற்போது முழுமையாக அந்த வேலையுடன், பிக் பாஸ் வீட்டிற்க்குள் நுழைந்துள்ளார், அதிக எதிர்ப்பார்ப்புடன் புயல் மையம் கொண்டதாக சித்தரிக்கபட்ட கஸ்தூரியை, ஒரே செகண்டில் விழி பிதுங்க வைத்துள்ளார் வனிதா.

ஆள் இல்லாத காட்டுக்கு நான் தான் ராஜான்னு வந்தவுடன், அலம்பல் துவங்கிய கஸ்தூரிக்கு வனிதா எண்டிரி லேசான அதிர்ச்சி வைத்தியம் தான் என்றாலும், லைட்டாக போய் அந்த பக்கம் நின்றடலாம்ன்னு இருந்த கஸ்தூரியை,

சரியா கண்டு பிடிச்சு, நீங்க சொன்ன தீர்ப்புல எனக்கு உடன் பாடில்லனு ஆரம்பிச்ச வனிதா, மாலை மாற்றிக்கொள்ள சொல்லுரீங்க பெரிய மனுஷி பண்ற வேலையா இதுன்னு குடுமியை பிடிக்க ஆடிப்போன கஸ்தூரி அது இதுன்னு சமாளிக்க,

இதுக்காக தான் நீ உள்ள வந்திருக்கியா? என தர்ஷன் பக்கம் திசை திரும்ப அப்பாடான்னு பெருமூச்சு விட்ட நம்ம கஸ்தூரி, 1000 வாலா வெடிச்சு ஓஞ்சது போல அமைதியானார்.

வீட்ல மற்ற ஹவுஸ் மேட்ஸையும் லேசாக வறுத்தாலும் கூட  வனிதா கஸ்தூரிக்கு நேராக கொக்கி போட்டது மற்றவர்களுக்கு உள்ளூராக இருந்த குஷியை முகத்தில் காண்பித்ததது எனலாம்