அபி ஒரு தலைக்காதல்! முகைன் ரொம்ப யோக்யமா? கமலை சீண்டி பார்க்கும் வனிதாக்கா!

பிக் பாஸ் வீட்டிற்க்குள் நடக்கும் கலவரங்களில் பல தீர்த்து அவர் வேறு பாதை நோக்கி அன்றாட நீரோட்டத்தில் கலந்துவிடும் வகையில், அதற்க்கு மாறாக சில தீர்க்கபடாத சர்ச்சைகள் வாரத்தின்,


இறுதி நாட்களில் நம்மவர் கமல்ஹாசன் தீர்த்து வைக்க களம் இறங்குவார், இதற்கிடையில் கடந்த வாரம் அபியை எல்லை மீறிப்போவதாக நேரடியாக கண்டித்த கமல்ஹாசன்,

அனைவர் முன்னிலை ஒரு பொது மேடை என்றும் பாராமல் முகைன் வளர்ச்சிக்கு அபியின் காதல் தான் தடையாக உள்ளது என போட்டு உடைக்க அறண்டு போன அபி இனி செய்யமாட்டேன் என உடைந்து போவார்

இதனை பார்த்த பெரு வாரியான மக்களுக்கு இருந்த கேள்விதான், அபி மட்டும் தான் நடந்த வைகளுக்கு பொறுப்பா? முகைனுக்கு பங்கு இல்லையா என தோன்றும் கேள்விகளை அச்சு பிசறாமல் கேட்டவர் வனிதா,

டேய் ! உன்னை பற்றி எல்லாம் தெரிந்துக்கொண்டு பேச வந்துருக்க என்கிட்ட கதை சொல்லாதன்னு வனிதா ஆரம்பித்த தோரணை சபாஷ் போட வைத்தது.

அதுவும் அபிக்கு ஆதரவாக அல்லாமல் , ஒரு பெண்ணாக வனிதாவின் இந்த ஸ்டாண்டு அடிச்சு தூள் கிளப்பியுள்ளது மேலும் அவருக்கான பாதையில் அவர் சீராக பயணித்து வருகிறார், இனி தான் தரமான சம்பவங்கள் இருக்கு என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்