ஜாங்கிரி Vs அபி! பற்ற வைத்த ஷெரீன்! தூண்டி விடும் வனிதா!

சர்ச்சைகளுக்கு பேர் போன வனிதா பாரபட்சம் இலாமல் தனது ரவுடிதனத்தை அனைவரிடமும் காண்பிபவர், அதிலும் மீரா, மது மீது அதிகமாக பாயும் வனிதா


நேற்றைய சூழலில் அபியை தூண்டி விட்டி அதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டார்.அவர் பேசிய தோரணை அபியின் மண்டையை சலவை செய்யும் அளவிற்கு பக்காவாக இருந்தது.

ஒருவருக்கு ஒருவர் சாதாரணமாக பேசுவதை ஒட்டு கேட்பது தவறு அதை சம்மந்தபட்டவரிடம் சொல்லி பிரச்சனையை பெருசாக ஊதிவிடும் பண்பை சரியாக செய்து வரும் செரின்.

நேற்றைய நிகழ்ச்சியிலும் சிறப்பாக சம்பவம் செய்தார். இதற்கிடையில் மதுவை சகி சாவித்திரி முக மூடியை அணிந்து நீ மற்றவர்களை ஏமாற்று என்னிடம் வேண்டாம் என உச்சபட்சமாக தனிப்பட்ட வாழ்வியல் முறையில் தாக்கி பேசும் அளவிற்கு ,தனிமனித தாக்குதல் போக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் அதிகரித்து வருகிறது.

நாளை முதல்வராக வர எத்தனிக்கும் கமல் ஹாசன் எப்படி இது போன்ற அத்து மீறல்களை அனுமதிக்கிறார் என்ற கேள்வி பரவலாக இருந்து வருகிறது.