பத்த வச்ச சேரன்! என்னோடு கதைக்காதே ! கண்கலங்கிய லாஸ்லியா! என்ன நடக்கிறது பிக்பாஸ் வீட்டில்!

பிக் பாஸ் வீட்டில் நாளுக்கு நாள் பிரச்சனைகள் கூடுவது ரசிகர்களை நிகழ்ச்சியின்பாற் ஈர்ப்பதற்க்காக தான் என்றாலும் இன்றைய பிரமோ ரசிகர்களை கண்கலங்க வைத்துள்ளது.


அதிலும் தமிழகமே கொஞ்சி கொண்டாடி தீர்க்கும், லாஸ்லியா உடைந்த குரலுடன் பேசும் பிரமோ வெளியாகி அவர் ஆர்மி மத்தியில் பெரும் சோகத்தை கிளப்பியுள்ளது.

கவினுக்கு லாஸ்லியா கொடுத்த ஒரு நாள் முழுக்க அவளை பார்க்க கூடாது என்ற டாஸ்க் சாக்‌ஷிக்கு தெரியாமல் பார்த்து கொள்ள வேண்டும் என, கவின் கேட்டிருந்த விஷயம் கசிந்து விட்டது போல,

ஒரு புறம் வனிதா உன் வாழ்க்கையை கெடுத்து கொள்ளாதே என அறிவுறை சொல்ல , நொருங்கிய முகத்துடன் சாக்‌ஷி ஓரமாக உட்கார்ந்திருக்க, லாஸ்லியா அழுது புலம்பும் காட்சிகள் வெளியாகியுள்ளது.

இந்த காட்சிகள் மூலம் விஷயம் வெளியே கசிந்திருக்கும் என்பது தெரிகிறது. மேலும் சேரனுக்கு மட்டுமே தெரிந்த விவகாரம் மற்றவர்களுக்கு தெரிய வந்ததன் காரணம் என்னவாக இருக்கும்,

லாஸ்லியாவை மகளாக கருதிய சேரன் கவினிடம் இருந்து பாதுகாத்து கொள்ள இப்படி செய்திருப்பாரோ என பார்த்தாலும் பத்த வச்சிட்டியே பரட்ட என நெட்டிசன்கள் சேரனை நக்கல் அடித்து வருகின்றனர்.