ஆயாவான மீரா! போட்டுத் தாக்கிய சாண்டி! கீரி பாம்பாகிய ஹவுஸ்மேட்ஸ், இரண்டான பிக்பாஸ் வீடு!

பிக் பாஸ் வீட்டில் வழக்கமாக கொடுக்கபடும் டாஸ்க் அனைவருக்கும் ஓரளவு சாதக பாதகமாக இருந்தாலும் கண்டெஸ்டண்ட் எப்போதும் அதை செய்தாகியே தீரவேண்டும் என்ற கட்டாயம் உண்டு.


ஒருப்பக்கம் அதை முணங்கி கொண்டே செய்தாலுமே கூட மற்றொரு பக்கம் , அதை ரசித்து செய்வதற்க்கான நேரங்களும் பல சமயங்களில் அமைந்து விடுகிறது.

அந்த நிலையில் நேற்றைய பிக் பாஸ் வீட்டில் கொடுக்கபட்ட டாஸ்க் ஹவுஸ் மேட்டை குதூகலப்படுத்தியது, சும்மாவே ஜோடியாக சுற்றும் நபர்களுக்கு நேற்றைய டாஸ்க் கூடுத்கலாக கோர்த்து விட்டது போலவே அமைந்தது எனலாம்

அப்படியாக செரினை - தர்ஷனுக்கு, கவினை -சாக்‌ஷிக்கு, அபியை - முகைனுக்கு என கொஞ்சமும் ஜோடி மாறாமல் பார்த்து சேர்த்து வைத்த பிக்பாஸ் ,அதற்க்கு ஏற்ப அட்டகாசமான டாஸ்க்கையும் கொடுத்து, சேரனையும் - ஜாங்கிரி மதுவையும் கோர்த்து விட ஒரு விதமாக பாம்பு , கீரி என இரண்டானது இன்றைய பிக்பாஸ் வீடு,

இதற்கான இடையில் நடந்த சுவாரஸ்யங்களுக்கு கொஞ்சமும் பஞ்சமில்லை . எனினும் பார்வையாளர்களுக்கு கொஞ்சமும் கண்டெண்ட்டுக்கு குறைவில்லாமல் பார்த்து கொண்டார் சாண்டி, வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் மீரவை ஆயா என கலாய்த்து தள்ளினார் மாஸ்டர் சாண்டி.