இந்த மாதிரி நேரத்துல ரொமான்ஸ்! ஐ லைக் இட்! தர்ஷனை ஏற்றிவிட்ட ஷெரீன்!

தர்ஷன் வனிதாவிற்கு ஒரு புறம் டப்பான போட்டியை கொடுக்க, மற்றொரு பக்கம் வனிதா ஆடும் ஆட்டத்திற்கு எல்லாம் ஆமாம் சாமி போடும் செரின் சாக்‌ஷி சற்று தள்ளி நின்றனர்.


போட்டி என்றதும் விட்டுக் கொடுக்காமல் விளையாடிய சாக்‌ஷி, செரினிடம் வனிதாவுக்கு எதிராக பேச ஆரம்பித்த நிலையில், மற்றொரு பக்கம் தர்ஷன் பக்கம் பேச போன செரினை,

வனிதா யாரும் பாய் பிரண்டுக்காக என்கிட்ட பேச வேண்டாம்னு மூக்கு உடைக்க, கடுப்பாகி இரண்டு பேரும் வெளியே வர, இந்த நேரத்துலையும் உனக்கு ரொமேன்ஸ் வருதா ?

பட் ஐ லைக்கிட்  இப்படி தர்ஷனிடம் செரின் சொல்ல அசடு வழிய தர்ஷன் போகும் காட்சிகள் அதிகமாக கிண்டலடிக்கபடுகிறது.

இதற்கிடையில், வனிதாவிற்க்கு  ஆரம்பம் முதலே சாதகமாக இருந்து வந்த செரின் , சாக்‌ஷி தற்போது வனித்காவின் தொடர் நடவடிக்கை மீது அதிருப்தி கொண்டவர்களாகவே காணப்படுகின்றனர்.

மேலும் இவர்களை வைத்தே களத்தில் ரணகளமாகலாம் எனவும் எதிர்ப்பார்க்கபடுகிறது. சாக்‌ஷி கவினை கொத்திட்டு போவாங்களான்னு பயப்பட மற்றொரு பக்கம்.செரின் காதலில் திளைத்து வருகிறார்.