வனிதாவுக்கு எதிராக சாக்சியை கொம்பு சீவும் அபி! பிக்பாஸ் வீட்டில் உச்சகட்ட டென்சன்!

பிக் பாஸ் வீட்டின் முதல் நாளில் இருந்தே மீரா மீது அபி சார்ந்த தோழமைகள் கார்னர் செய்து நடத்தும் பிரச்ச்னைகள் கணக்கற்றவை.இது அபிக்கும், மீராவிற்க்குமான தனிபட்ட அதாவது நிகழ்ச்சி முன்னால் நேர்ந்த மனகசப்பு.


அதை மனதில் வைத்துக் கொண்டு மீராவை அபி பழி வாங்க நினைத்து வனிதா, செரின் என மற்றவர்களை அவர் பயன்படுத்திக் கொண்டார், மேலும் ஒரு கட்டத்தில் வீட்டில் அவருக்கு நிகராக மதுவும் கார்னர் செய்யபட்டார்.

மது அதற்காக எந்த சமரசம் செய்யவும், முன்வரவில்லை ஆனால் மீரா தானாக நட்பை உருவாக்க நினைத்து அதில் தான் சிக்கலை சந்திக்கிறார்.இதற்கு இடையில் அபியுடன் அவர் பேச்சு வார்த்தை நடத்துகிறார்.

அவர் பேசுவது எல்லாவற்றையும் குற்றமாக பிரதிபலிக்கும் அபியை மற்ற நண்பர்கள் அடையாளம் கண்டுக் கொள்ள மேலும் மதுவுடன் பைசல் செய்ய போக அவர் பேசியதை வனிதா டிவிஸ்ட் செய்துவிட கடுப்பான அபி மீன் மார்க்கெட் என கமெண்ட் அடிக்கிறார்.

இதனால் காண்டான வனிதா மற்றும் அவரது ஆதரவு தற்போது அபிக்கு மாற்றாக மீராவை ஆதரிக்க முன் வந்துள்ளது, அதுக்கு சாம்பிள் தான் நேற்று காலை யோகா சொல்லிக் கொடுத்த மீராவை வனிதா புகழ்ந்து தள்ளுகிறார்.

இதனால் சுதாரித்துக் கொண்ட ஷாக்‌ஷி செரினிடம் மீரா, நமக்கும் வனிதா ரேஷ்மாவுக்கும் இடையே வர பார்க்கிறாள், என கொளுத்திப்போட ,செரினும் டியூனாகிறார்.

மேலும் மீராவுக்கு வீட்டில உள்ள நிலையை , சாண்டி பாடும் பாடல்.வரிகள் ' கார்னர், கார்னர், பாரிஸ் கார்னர் ' பாடல் மூலமாக டிரோல் செய்து வருகின்றனர் நெட்டிசன்கள்.