இந்த வாரம் மட்டும் சாக்‌ஷி இருந்திருந்தா? கண்டிப்பா ரணகளம் தான்! பிக்பாஸ் களேபரம்!

பிக் பாஸ் வீட்டிற்க்குள்ளாக நுழைந்தது முதலாக சாக்‌ஷி மற்ற செரின் அழகான மற்றும் ஆழமான அன்பை பரிமாறி வருபவர்கள், சாக்‌ஷிக்கான எல்லாமும் செரின் இருப்பது பல நேரங்களில் காண முடியும்.


இதன் ஒரு பகுதி தான் கவின் விவகாரத்தில் சாக்‌ஷி அதிகமாக உணர்ச்சி வசபட்டபோதெல்லாம் செரின் மிக நேர்த்தியான ஆழமான அட்வைஸ்களை கொடுத்து இருப்பார்.

ஒரு கட்டம் வரையில் இருவருக்குமான நெருக்கம் அதிகரித்து நிலையில் எதிர்ப்பாராத விதமாக சாக்‌ஷிக்கு எதிராக செரின் கடந்த வாரம் நிலையில் மாறு பட்டிருந்தார்.

நிகழ்ச்சியின் ஒரு இடத்தில் செரின் , தன்னை பற்றி அக்கறை கொஞ்சமும் இல்லாமல் சாக்‌ஷி எப்போதும் சுயநலமாக அவருடை பிரச்சனை மட்டுமே பார்பதாக கூறியிருப்பார்,

மேலும் கடந்த வாரம் கமல் தேவதை மற்ற டெவில் முடி சூட்ட சொன்ன போது அவர், மதுவை உயர்த்தி பேசி, சாக்‌ஷிக்கு டெவில் முடி கொடுத்த போது சாக்‌ஷி ஆடிப்போனார்.

அதிலும் குறிப்பாக தர்ஷன், செரினை சாக்‌ஷியை அதிகம் பயன்படுத்தி கொள்வதாக சொன்ன வார்த்தையை கடைசி நேரத்தி வீட்டில் இருந்து வெளியேறும் போதும் கண்டித்தவர் சாக்‌ஷி.

இதனை அடுத்து செரின் தர்ஷன் முன்னிலையில் இந்த வாரம் மட்டும் அவள் இருந்து இருந்தால் நிச்சயமாக இருவருக்கும் பெரும் விரிசல் வந்திருக்கும் என வெளிப்படையாக ஒப்புக்கொண்டதும் , குறிப்பிடதக்கது .