மீண்டும் சாக்சியுடன் நெருக்கம்..! கையிலும் மதுக்கோப்பை! பெயரை கெடுத்துக் கொண்ட ஷெரீன்!

பிக்பாஸ் வீட்டில் கிடைத்த நல்ல பெயரை கெடுத்துக் கொள்ளவேண்டாம் என சாக்‌ஷியுடன் ஷெரின் இருக்கும் வீடியோவைப் ரசிகர்கள் ஷெரினுக்கு அறிவுரை கூறி வருகின்றனர்.


பிக் பாஸ் வீட்டில் ஷெரின், சாக்‌ஷி மற்றும் அபிராமி ஆகியோர் பெண்கள் அணி அமைத்திருந்தனர். எந்த பிரச்சனை என்றாலும் புகை பிடிக்கச் செல்வது, தங்களது எண்ணங்களை பரிமாறிக் கொள்வது, ஆறுதல் கூறிக் கொள்வது என அவர்கள் ஒற்றுமையாக இருந்தனர். முகினுடன் ஏற்பட்ட நட்பால் இந்த அணியில் இருந்து முதலில் அபி வெளியேறி பின்னர் லாஸ்லியாவோடு நெருக்கமானார். கடைசி வரை அவர்களது நட்பாக இருந்தது. 

பின்னர் சாக்‌ஷி கவினுடனும், ஷெரின் தர்ஷனுடனும் காதல் சர்ச்சையில் சிக்கினர். சாக்‌ஷியின் வெளியேற்றத்தால் ஷெரின் மனதளவில் பாதித்தார். பிக் பாஸ் வீட்டிற்குள் மீண்டும் வந்த சாக்ஷி ஷெரினை வெற்றியாளர் ஆக்க வேண்டும் என்று தான் ஆசைப்பட்டார்.

வனிதா பிரச்சினைகள் ஏற்படுத்தினாலும் அவர் ஷெரினுக்கு ஆதரவாகவே நடந்து கொண்டார். இந்நிலையில் ஷெரின் வீட்டிற்கு சென்று அவரை சந்தித்த சாக்‌ஷி, அங்கு அவர் மசாலா டீ போடுவது போலவும், பின்னர் அவர்கள் வெளியே அவுட்டிங் செல்வது போலவும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அந்த வீடியோவில் ஷெரின் தோழி கையில் கோப்பை ஒன்றுடன் காணப்படுகிறது. அதைப் பார்த்த ரசிகர்கள் அவர்கள் மது போதையில் இருப்பதாக கூறி வருகின்றனர். பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் கிடைத்த நல்ல பெயரை மீண்டும் சாக்‌ஷியுடன் சேர்ந்து கெடுத்துக் கொள்ளாதீர்கள் என ஷெரினுக்கு அவரது ரசிகர்கள் அறிவுரை கூறி வருகின்றனர்.