உணர்ச்சிகளை கட்டுப்படுத்துங்க! ஹவுஸ்மேட்ஸ்க்கு கமல் சொன்ன ஷாக் அட்வைஸ்!

பிக் பாஸ் வீட்டிற்க்குள் கடந்த சில வாரங்களாக இதுவரை நடந்த பல உணர்ச்சி எழுச்சியை விட டோசேஜ் சற்று அதிகமாக தான் உள்ளது. இந்த நிலையில், இந்த சீசனில் முதல் நாளில் இருந்து,.


நிகழ்ச்சி மூலமாக பிரபலமடைய தேவையான அனைத்து யுக்திகளை போட்டியளர்கள் தங்கள் சுய விருப்ப மற்ற தனிப்பட்ட கருத்து அடிப்படையில் அணுகி வந்துள்ளனர்.

இந்த வகையில் நேற்றைய மதுமிதா வெளியேற்றம் குறித்து கமல் கமுக்கமாக இருப்பது ஒருப்பக்கம் விமர்சனக்களுக்கு உள்ளானாலும் கூட மற்றொரு பக்கம் அதற்க்கு சமாளிக்கும் வண்ணமாக சில கேள்விகள் போட்டாலும் அவை எடுபடவில்லை.

இந்த நிலையில் கமல் இன்றைய பிரமோவில் உணர்ச்சுகளை ஹவுஸ்மேட்ஸ் கட்டு படுத்த கற்றுக்கொள்ள வேண்டும் என அட்வைஸ் கொடுப்பது போலவும், வீட்டில் மதுவை தொடர்ந்து இந்தவாரம், எவிக்‌ஷன் உள்ளது எனவும் குறிப்பிடுகிறார்.

இதனை அடுத்து வெளியான மற்றொரு புரோமோவில் கமலுக்கானப் பிரத்யேக மொழி அமைப்பில், வேண்டியவர் வேண்டமால் போகும் விந்தை என அபி முகைனும் காட்சிபடுத்துபடுவதும்

வேண்டாதவர் வேண்டியவர் ஆவார்யென வனிதா காட்சி படுத்தபடுகிறார் , மேலும் மது மற்றும் லாஸ்லியா காட்சி படுத்தபடும் போது, நமக்கு வேண்டியவர் , வேண்டாதவர் இல்லை என்ற வார்த்தை குறிப்பிடபடுகிறது. இதனால் நேற்றைய சம்பவத்திற்க்காக இன்று சம்மந்தபட்ட போட்டியாளர்களிடம் கேள்விகள் எழுப்பபடவும் வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.