லாஸ்லியாவுடன் என்ன உறவு? மாலையும் கழுத்துமாக நின்ற இளைஞன் வெளியிட்ட பகீர் தகவல்!

பிக்பாஸ் வீட்டில் தர்ஷன், முகென், கவின், சாண்டி வரிசையில் இலங்கையை சேர்ந்த லாஸ்லியாவையும் சொல்லலாம்.


தற்போது லாஸ்லியா மாலையும் கழுத்துமாக திருமணம் ஆன கோலத்தில் பஸ்லுல்லா முபாரக் என்பவருடன் உள்ள படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த பல ரசிகர்கள் லோஸ்லியாவிக்கு திருமணம் ஆகிவிட்டதாக ஆச்சரியப்பட்டுள்ளனர். 

இது ஒரு புறம் இருக்க லாஸ்லியாவுடன் மாலையும் கழுத்துமாக இருக்கும் பஸ்லுல்லா முபாரக் அந்த புகைப்படம் குறித்து விளக்கம் அளித்துள்ளார். தாங்கள் எதற்காக அப்படி நிற்கிறோம் உண்மையில் தாங்கள் யார் என்ற கேள்விகளுக்கு நெட்டிசன்களுக்கு பதில் அளிக்கும் வகையில் பதிவிட்டுள்ளார்.

அதில் “தவறான விஷயங்கள் தொடர்ந்து பரப்பப்பட்டு வருகின்றனது. லாஸ்லியா உடன் தனக்கு ஒரு நல்ல உறவு உள்ளது. அது விஷமிகள் எதிர்பார்ப்பது போல் கிடையாது. அது சகோதரத்துவமான நட்பு. அது எங்கள் பெற்றோர்களும் தெரியும்” என்று பஸ்லுல்லா முபாரக் பதிலடி கொடுத்துள்ளார்.

ஆனால் லாஸ்லியா தனது பயோ டேட்டாவில் கணவர் பெயர் என்று குறிப்பிடப்பட்டுள்ள இடத்தில் பஸ்லுல்லா முபாரக் என குறிப்பிட்டுள்ளது ஏன் என மறுபடியும் நெட்டிசன்கள் கேட்கத் தொடங்கி உள்ளனர். மேலும் மாலையும் கழுத்துமாக எதற்காக நிற்கிறார்கள் என்று பஸ்லுல்லா முபாரக் உரிய விளக்கம் தரவில்லை எனவும் பிக்பாஸ் ரசிகர்கள் சிறுபிள்ளைத் தனமாக கேட்கிறார்கள்.