எத்தன பொன்னுங்கடா? கவினுக்கு ஷாக் ட்ரீட்மென்ட் கொடுத்த லாஸ்லியா! பிக்பாஸில் அமளி துமளி!

பிக் பாஸ் வீட்டின் நேற்றைய நாள் அமளித்துமளியாக முடிய இன்றைய நாளில் துவக்கமே அமோகம்.


ஆரம்ப நாள் முதலே வேட்டையனுக்கு லாஸ்லியா மீது ஒருக்கண்ணு, இது ஊருக்கே தெரிஞ்சது தான், துவக்கத்துல இருந்து அபி, சாக்‌ஷினு மாறி மாறி வந்தாலும் , சான்ஸ் கிடைக்கும் போதெல்லாம லாஸ்லியாவை கவுக்க மறந்ததில்லை கவின், இது லாஸ்லியா ஆர்மி ரசிகர் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையில் சாக்‌ஷி இருக்கும் போதே கவின் லாஸ்லியாவை நேரடியாக் கரெக்ட் பண்ணுவது எல்லாம் வேற லெவல், அப்படி ஷாக்சி க்கும் தெரியாமல் கவின் ,லாஸ்லியாவை கவிக்க ஹோம்வர்க் செய்ய, இறுதியாக லாஸ்லியா ஒரு நாளைக்கு நீ என்ன பார்த்து பேசக்கூடாது, அதிலும் பார்த்த கூட முகத்த திருப்பிக்கணும் இப்படிலாம் கண்டிஷன் போட ,கவின் ஆடிப்போயிட்டாப்பல

என்ன செய்றதுன்னு தெரியாம தவிச்ச கவின், லாஸ்லியா பேச்சை தட்டாம ஒத்துக்க, பதிலுக்கு மற்றொரு கண்டிஷன் போடுறாரு.அதாவது பதில் டாஸ்க். கவின் லாஸ்லியா டாஸ்க் கை ஒத்துக்கிட்டதை சாக்‌ஷிக்கு தெரியாம பார்த்துகணும் , தெரிஞ்சா அவள் கஷ்டபடுவான்னு நம்ம கவின் போட்ட பிட்டுகளை நம்பி லாஸ்லியாவும் ஒத்துக்க, டாஸ்க் ஆரம்பிச்சது. சும்மாவே நம்மாளு மானாவாரியா வழியுவாப்ல அதுல டாஸ்க்கு குடுத்தா சும்மாவா?!