முடிவுக்கு வந்தது காதல் காதை! பிக்பாஸ் வீட்டில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட பிரபலம் இவர் தான்!

பிக் பாஸ் வீட்டில் ஒவ்வொரு வாரமும் ஒரு நபர் வெளியேறுவது தான் வழக்கம் என்றாலும் இது வரை நடந்துள்ளது.


பிக் பாஸ் வீட்டிற்க்குள்ளாக இது வரை 10 முறை நாமினேஷன் செய்யபட்ட நபர்கள் வெளியேறியதை அடுத்து கடந்த வாரம் நோ எலிமினேஷன் என கமல் ஹாசன் போட்டியாளர்களுக்கும், ஆடியன்ஸுக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.  இதற்கிடையில் இந்தவாரம் எலிமினேஷனில் லாஸ்லியாதான் வெளியேறியுள்ளார்.

தொடர்ந்து கவின் உடன் இணைந்து லாஸ்லியா அடித்த லூட்டிகள் கொஞ்சம் நஞ்சம் இல்லை, இருவரது பெயரும் இல்லாமல் ஒரு வாரம் கூட கமல் நிகழ்ச்சியை முடிக்காத நிலையில், வீட்டில் மற்றவர்களை எதிர்த்து பேசி ஆடிடியூட் காட்டுபவராக அவர் பிரதிபலிக்கபட்டார், மேலும் ஆரம்பத்தில் அவருக்கு இருந்த ஏகோபித்த ஆதரவை அவர் இழந்துள்ளார் எனவும் கருத்து நிலவி வருகிறது. 

இந்த நிலையில் யாரும் எதிர்ப்பாராத விதமாக இந்த வாரம் லாஸ்லியா வெளியேறியுள்ளார். வழக்கமாக ஞாயிறன்று பிக்பாஸ் ஒளிபரப்பாகும் நிலையில் அதற்கான எலிமினேசன் சூட்டிங் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் லாஸ்லியா வெளியேறியதை பார்வையாளர்களாக பங்கேற்றவர்கள் வெளியே கசியவிட்டுள்ளனர்.