வெளியேறிய சாக்‌ஷி! மன்னிப்பு கேட்ட கவின் ! கிரீன் சிக்னல் கொடுத்த சாக்‌ஷி அப்பா! வீக் எண்ட் கலாட்டா!

பிக் பாஸ் வீட்டின் நேற்றைய நிகழ்ச்சியில் நீண்ட உணர்வு போராட்டத்திற்க்கு பின்னர் சாக்‌ஷி வெளியேறினார், பெரும்பாலும் இந்த வாரம் எலிமினேஷன் இருக்காது


என நேயர்கள் எதிர் பார்த்த நிலையில், சாக்‌ஷி வெளியேறியுள்ளார், கடந்த சில வாரங்களாக அழுது புலம்பி வந்த சாக்‌ஷி வெளியேறும் போது எந்த விதமான சலனமும் இல்லாமல் காணப்பட்டார்.

அவர் பெரிதும் அழுது புலப்பியவர், ஆனால் அவர் வீட்டை விட்டு வெளியேற கமல் சொன்ன போதும் கூட எந்த சலனமற்று, அவர் நேரத்தியாக மிக கடினமான சூழ்னிலையிலும் போல்டாக சமாளித்தார்.

சாக்‌ஷியுடன் அதிகமாக நெருக்கம். பாராட்டி வந்த செரின் ,மற்றும் அபி உடைந்து அழுத போது கூட தைரியமாக அவர்களுக்கு ஆறுதல் சொல்லி வெளியே வந்த சாக்‌ஷி, மற்ற ஹவுஸ் மேட்ஸ் மூக்கின் மீது விரல் வைக்கும் படி செய்துள்ளார்.

கமலை சந்திக்க வந்த சாக்‌ஷியை அழைத்து செல்ல அவரது அப்பா வந்திருந்தார், அவரிடம் சாக்‌ஷி குறித்த கேள்விக்கு, அவர் பெருமை படுவதாக பதிவு செய்து இருந்தார்.

இந்த நிலையில் கவின் சாக்‌ஷியிடமும் அவரது அப்பாவிடமும் மன்னிப்பு கேட்க இது வெறும் விளையாட்டு தானே ! ஏன் மன்னிப்பு கேட்குறீங்கன்னு சொல்ல, அவர் பச்சை கொடி காட்டியுள்ளது பார்வையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது