பிக் பாஸ் வீட்டின் காதல் மன்னன் கவினுக்கு நேற்றைய நிகழ்வில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேஷம் கொடுக்கபட, வழக்கம் போல அதிலும் காதல் செய்கிறார் கவின்.
என் தப்பு தான் மண்டியிட்ட கவின்! கலங்கிய லாஸ்லியா! 3வது காதலியா? என்னடா நடக்குது?
வீட்டில் நடக்கும் கொலைகளுக்கு விசாரணை நடத்திய கவின் மற்றவர்களுடன் லத்தியை வைத்து கொண்டு விசாரணை நடத்த, லாஸ்லியாவை விசாரிக்கும் போது கையில் பூவுடன் விசாரிக்கிறது எல்லாம் அநியாயம்.
அதிலும் மீராவை விசாரணை நடத்த சொல்லிவிட்டு, வழிந்து ஓடிய கவின், அதோடு நிறுத்திக் கொள்ளாமல் சாக்ஷி ஒருப்பகம் வெயிலில் மயானத்தில் கிடக்க, மற்றொரு பக்கம் வீட்டுக்குள்,
ஒரே தட்டில் லாஸ்லியாவிடம் சாப்பிட்டு கொஞ்ச, சும்மா போன சேரன் சாக்ஷியிடம் இதை கொளுத்தி போட, வீட்டிற்க்குள் பார்த்த சாக்ஷி,
நாங்க வெயிலில், கஷ்டபடுறோம் ஆனால் நீங்க உள்ள ஜாலியா இருக்கீங்கன்னு சாக்சி கவினை வைச்சு செய்ய மற்றொ.ரு பக்கம் லக்சரி பட்ஜெட்டில் நான் பங்கேற்க மாட்டேன் என சேரன் சொல்ல,
அடுத்தபக்கம், சரவணன் சேரனை சிறைக்கு செல்ல சொல்ல, சேரன் போக சரவண்ணுக்கு பதிலாகன்கவின் செல்கிறார், இடையில் சாக்ஷியும் லாஸ்லியாவும் ,
தாங்கள் போவதாக கேட்க , கவின் கையை பிடித்தபடி லாஸ்லியா அழும் காட்சிகள், என்னிடம் கதைக்காதே கவின் என கையை இறுக்கமாக பிடித்துக் கொண்டு லாஸ்லியா சொல்வது போன்ற காட்சிகள் வெளியாக,
எல்லாம் என் தப்புதான் , நான் நல்ல நண்பரா மட்டும் பழகியிருந்தா இப்படி ஆகியிருக்குமா? நான் ஒன்னு செய்ய போக அது ஒன்னாயிடுச்சுன்னு சொல்ல உணமையில் லாஸ்லியா அவர் பக்கம் விழுந்தாரா என்ற கேள்வியை எழுப்புகிறது.