சாக்சியை கழட்டி விட்ட ஜொள்ளு பையன் கவின்! இப்போ லாஸ்லியாவிடம் வழிசல்!

பிக் பாஸ் காதல் மன்னன் கவின் வந்த நாளே அபியை கவுத்துவிட, மச்சா..மச்சானு எப்பவும் பொம்பள பிள்ளைங்க பின்னாடி சுத்துறதையே கடமையா வைத்திருப்பவர்.


அதிலும் முதலில்  அபி, சாக்சி அடுத்து கவினின் பார்வை லாஸ்லியா பக்கம் திரும்பியுள்ளது.முதல் நாள் பாடல் மூலம் தனது விருப்பத்தை சொன்ன கவின் அடுத்த கட்டமாக ஒருப்படி முன்னால் சென்றார்.

லாஸ்லியாவிடம் நேராக சென்று எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும், நீ யார் வம்புக்கும் போகாமல் அமைதியாக இருப்பது இன்னமும் பிடிக்கும் என வழிய லாஸ்லியாவும் சிரித்தபடி சமாளிக்கிறார்.

இதற்க்கிடையில் சாக்சியை பக்கத்தில் வைத்துக் கொண்டு லாஸ்லியாவை ரொம்ப பிடிக்கும் என அசடு வழிய, சாக்சி புகையும் நிலை அவர் முகத்திலேயே தெரிந்தது

இரண்டு நாட்களுக்கு முன்னர் அழுது கொண்டிருந்த சாக்சியை அரவணைத்து ஆறுதல் கூறிய கவின் தற்போது சாக்சி முன்பே லாஸ்லியாவிடம் வழிவது என்ன சிக்கலை ஏற்படுத்தப்போகிறதோ தெரியவில்லை. எது எப்படியோ, மொத்தத்தில் கவினுக்கு அடிச்சது ஜாக்பாட் என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.