நெருக்கமாக அமர்ந்திருந்த கவின் - லாஸ்லியா! அடித்து விரட்டிய வனிதா! மானம் போச்சு என புலம்பல் வேற!

பிக்பாஸ் வீட்டிற்குள் கவினை வனிதா அடிப்பது போல் செல்லும் காட்சி ஒன்று இணையதளத்தில் பரபரப்பாக பரவி வருகிறது.


தற்பொழுது தமிழக மக்களால் அதிகம் பார்க்கப்படும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் சீசன் 3 இந்த நிகழ்ச்சியை நடிகர் கமலஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கி வருகிறார். நாளுக்குநாள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஏதேனும் ஒரு சம்பவம் நடந்து கொண்டே இருக்கும்.

அதேபோல் ஆர்வத்தை கூட்டும் வகையில் டாஸ்க்குகள் அமைந்திருக்கும். அதில் யாராலும் மறக்க முடியாத ஒரு டாஸ்க் என்றால் கிராமத்து டாஸ்க் தான். மீராமிதுன் மற்றும் சேரன் இடையே மிகப்பெரிய பிரச்சினை உருவாகி தமிழக அளவில் பேசப்பட்டது.

அதேபோல மீண்டும் ஒரு கிராமத்து டாஸ்க் பிக் பாஸ் வீட்டில் இன்று இரவு நடைபெற இருக்கிறது அதற்கான புரோமோ ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. அதில் கவின் லாஸ்லியா ஒன்றாக அமர்ந்து நெருக்கமாக பேசிக் கொண்டிருக்கும் பொழுது வனிதா வந்து சத்தமிட்டு இங்கிருந்து எழுந்து போ என்றும் கவினை அடிப்பது போலவும் சொல்கிறார்.

பின் சேரனிடம் வந்து இரண்டு குடும்ப மானம் கெட்டுப் போய்விடும் என்று புலம்புகிறார். இதனை பார்க்கும் போது இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சி ஆனது விருவிருப்பாக போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கவின் லாஸ்லியா பேசிக்கொள்வது வனிதாவிற்கு சுத்தமாக பிடிக்காது என்பது குறிப்பிடத்தக்கது.