அந்த காக்கா வந்தா மட்டும் அப்டியே விரட்டி விட்ரு ! பஞ்சாயத்து பண்ணும் கஸ்தூரியை கட்டம் கட்டும் ஹவுஸ் மேட்ஸ்!

பிக் பாஸ் வீட்டில் முக்கியமான பல தலைகட்டுகள் வெளியேறியதை அடுத்து, கடைசியாக உள்ளே போன கஸ்தூரி, வீட்டின் சூழ்நிலையை தனக்கு சாதகமாக உபயோகித்துக்கொள்ள நினைத்து இருந்தார்.


இந்த நிலையில் வீட்டில் நுழைந்த உடன் மற்ற ஹவுஸ் மேட்ஸ் கஸ்தூரியை பெரிதாக எதிர்ப்பார்த்தாலும் கூட சில விஷயங்களால் அவர்களுக்கு அப்பட்டமாக கஸ்தூரி தன்னுடைய நிலையை வெளிப்படுத்திவிட்டார்.

தொடர்ந்து வந்த நாளில் இருந்து, கஸ்தூரி மக்கள் வெளியில் ஆதரவாக இருக்கும் போட்டியாளர்களுடன் இணைந்தும் ,சற்று திட்டும் போட்டியாளர்களை திட்டியும் நிகழ்ச்சியை கையாண்டு வந்தார்.

அதில் ஒரு கட்டத்தில் மக்களின் ஆதரவு செரின் மற்றும் தர்ஷனுக்கு இருப்பதை பயன்படுத்தி கொள்ள அவர்களை மாலை மாற்றிக்கொள்ள சொன்னதும், கவின் மீது தனி வெறுப்பை காட்டுவது என தனியாக ராஜ்ஜியம் செய்ய நினைத்தவருக்கு,

வனிதாவின் திடீர் விசிட் பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது, அதிலும் வந்தவுடன் அவர் கஸ்தூரியை டார்கெட் செய்வதை உணர்ந்த ஹவுஸ் மேட்ஸ் கூட வனிதா பக்கம் ஒட்டிக்கொள்ள,

முக்கியமாக கவின் மற்றும் சாண்டி , முகைன் பிரச்சனை போது கஸ்தூரி மத்தீசம் செய்ய வர, நீங்க ஆன்கரிங் பண்ண வேண்டாம் உட்காருங்க என ஹவுஸ் மேட்ஸ் ஒட்டு மொத்தமாக ஒரு பக்கம் சேர்ந்தவுடன், கஸ்தூரி முகம் வெளிரிப்போனார்.

வீட்டிற்க்குள் வேறு திட்டங்களுடன் நுழைந்த கஸ்தூரிக்கு இந்த இன்ப அதிர்ச்சி சற்று ஹெவி டொசேஜ் தான் போலும், இருந்தாலும் நேயர்கள் வனிதா அட்ராசிட்டியை கொண்டாடி வருகின்றனர்.