சீனியர் நடிகையிடம் வரம்பு மீறினாரா பிக்பாஸ் சாண்டி? பழைய கதையை அவிழ்த்துவிடும் கஸ்தூரி! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

சென்னை: பிக் பாஸ் போட்டியாளர் சாண்டியின் இன்னொரு முகம் பலருக்குத் தெரியாத என்று, நடிகை கஸ்தூரி அதிரடியாகப் பேசியுள்ளார்.


பிக் பாஸ் டிவி நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலமாக நடனக் கலைஞர் சாண்டி தற்போது  பல தரப்பிலும் பிரபலமாகியுள்ளார். பிக் பாஸ் போட்டியாளர்களால் இதுவரை நாமினேஷன், எலிமினேஷன் எதுவும் செய்யப்படாமல் அனைவரிடமும் நட்பாகப் பழகி வரும் சாண்டியின் இன்னொரு முகம் பலருக்கும் தெரியாது என்று கஸ்தூரி கூறியுள்ளார். 

இதுபற்றி அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், ''விஜய் டிவியின் செல்லப் பிள்ளையாக சாண்டி இருப்பதால், அவரை நல்லவர் போல பிக் பாஸ் நிகழ்ச்சியில் காட்டுகிறார்கள்.

உண்மையில், அவருக்கு இன்னொரு முகம் உள்ளது. அது பலருக்கும் தெரியாது. அந்த முகம் வெளியே தெரிந்தால், மக்கள் அவரை நகைச்சுவையாளராக பார்க்காமல் வில்லனாகத்தான் பார்ப்பார்கள். அந்த முகம் எனக்கு நன்றாக தெரியும்,'' எனக் குறிப்பிட்டுள்ளார்.