முகின் யாருக்கு? அபிராமி - மீராவால் ரெண்டான பிக்பாஸ் வீடு!

பிக் பாஸ் வீட்டின் யார் யாருடன் பேச வேண்டும் என மற்றவர்கள் தீர்மானிக்கும் பஞ்சாயத்து அடிக்கடி நிகழ்வது தான், அதிலும் நேற்றைய நிகழ்ச்சியில் நடந்த அக்கப்போர்கள் உட்சபட்சம்.


அதிலும் முகின் யாருடன் பேச வேண்டும் என மீரா கருத்து சொல்ல சாக்‌ஷி அதை மற்றவர்களிடம் கொளுத்தி போடிகிறார்.இதனை அடுத்து இரண்டானது வீடு.

ஒரு சார்பில் வனிதா, செரின், சாக்‌ஷி, அபி எனவும் மற்றொரு புறம் மீரா, மது என இரண்டாக மோதி வீட்டை மீன் கடையாக்கினர்.ஒரு பக்கம் இதை விட நினைத்தாலும் வனிதா தூண்டி விட , அபியும் முகினும் நடு வீட்டில் நாங்க நண்பர்கள் தான் எங்களுக்குள் எதுவும் இல்லை.

இதையும் தாண்டி யாருக்காவது பிரச்சனை என்றால் கண்ணை மூடிக்கோங்கன்னு சொல்லிட்டு அபி ஓடியதும், நெட்டிசன்கள் வயசான காலத்துல ஏன் இதெல்லாம் உனக்கு தேவையா என கிண்டலடித்து வருகின்றனர்.