என் காதலி வெளிய தான் இருக்கா..! அவள நான் பார்த்துக்குறேன்..! செரீனுக்கு சமாதானம் சொன்ன தர்ஷன்..! டிராக் மாறுகிறதா?

பிக் பாஸ் வீட்டில் கடந்த சில வாரங்களாக வேண்டும்.என்றே வனிதா தர்ஷனை டார்கெட் செய்து செரினை அவருக்கு எதிராக பயன்படுத்த முயற்சி செய்த வந்தார்.


எல்லா வகையிலும் தொடர்ந்து முயற்சித்த வனிதாவை செரின் கண்டுகொள்ளாமல், நேர்த்தியாக சமாளித்து வந்துள்ளார், பல சந்தர்ப்பங்களில் சத்தம் போட்டுள்ளார். இந்த நிலையில் தான் சில நாட்களுக்கு முன்னதாக வனிதா, தர்ஷன் உடன் செரினுக்கு தொடர்பு இருப்பதாகக் கொச்சை படுத்தி பேச கொதித்து போன செரின், வனிதாவை வெளுத்து வாங்கினார்.

இதனை அடுத்து நேற்றைய நிகழ்ச்சியில் செரினை சமாதான படுத்த போன தர்ஷன், சனம் ஷெட்டி எனக்கு காதலியா இருக்கா, அவள் வெளிய இருக்கா, அவள் என் காதலி, அவளுக்கு என்ன செய்ய வேண்டும் ,எப்படி சொல்லிப்புரிய வைக்க வேண்டும் என எனக்கு தெரியும். இன்றளவும் எனக்கு அவள் செய்தது தெரியும், நீ எனக்கு நல்ல நட்பு தான் என தெரியும் நமக்குள்ளாக எந்த தவறான உறவ இல்லை என நமக்கு தெரியும்.

இதை யாருக்கும் புரியவைக்க நமக்கு அவசியம் இல்லை என சொல்ல மற்றொரு பக்கம், வனிதா மீது தான் தவறு என்ன செரினை வனிதாவுக்கு எதிராக கொம்பு சீவி விடுகிறார் தர்ஷன்.