முன்னாள் காதலி அபி குறித்து மனம் திறந்து லயித்த தர்ஷன்! வெறித்து பார்த்த ஷெரீன்!

பிக் பாஸ் வீட்டின் நேற்றைய டாஸ்க் செண்டர் பிரஸ் மிஸ்டர் காண்பிடண்ட் பட்டத்தை வென்றவர் தர்ஷன் தான், அழகிய தோற்றம், என்றாலும் செரினை தர்ஷன் இம்ப்ரஸ் பண்ண எடுத்த முயற்சிகள் மற்ற ஹவுஸ் மேட்சை அசர வைத்தது.


அதிலும் தர்ஷனுக்கே உரிதான பாங்குடன் வில் யூ பீ மை? அப்படினு புதிர்ப்போட கொஞ்சமும் யோசிக்காமல் செரினும் எஸ் ஐ வில் பீ ந்னு பதில் கூறியது நடுவர்களாக இருந்தவர்களை அதிகமாக கவர்ந்தது

அதன் எதிரொலியாக தர்ஷன் இந்த வார (MR Confident) மிஸ்டர் காண்பிடண்ட் பட்டத்தை மற்ற போட்டியாளர்களிடம் இருந்து தட்டிச் செல்கிறார். இதற்கிடையில், டாஸ்க்கு படி வெற்றி பெற்றவர் அவர்களுக்கான சொந்த காதல் தருணங்கள் பற்றி பகிர்ந்துக் கொள்ள வேண்டும் என்பது நிபந்தனை, இதன்படி வேண்டும் என்றே சித்தப்பு கோர்த்துவிட,

கதை சொன்ன தர்ஷன், தனது பள்ளி வாழ்க்கையில் அதிகமாக நேசித்த அபிராமி குறித்து நெகிழ்ந்து பேசினார், அதிக நயத்துடன் தர்ஷன் லயித்து சொன்ன காதல் கதையினால், மற்ற ஹவுஸ் மேட்ஸ் சந்தோஷத்தில் சந்தித்தாலும் கூட மற்றொரு பக்கம், தர்ஷன் அபின்னு பேர் சொன்னதும் செரின் வெறித்து பார்த்துக் கொண்டிர்ந்தார் .