கண் கலங்கிய அபிராமி! என்ன செய்தார் கவின்? பிக்பாஸ் வீட்டில் பரபரப்பு!

தன்னுடைய காதலை வெளிப்படையாக கூறியும் கவின் ஏற்க மறுத்த காரணத்தினால் அபிராமி கண் கலங்கினார்.


பிக்பாஸ் வீட்டின் முதல் நாளிலேயே தனக்கு கவின் மீது க்ரஸ் என்று கூறி சுவாரஸ்யமாக்கினார் அபிராமி. இரண்டாம் நாளில் தனது தோழி சாக்சியுடன் சேர்ந்து கவினை பிராக்கெட் போட அபிராமி முயற்சி செய்தார். அபிராமி உன்னை விரும்புவதாக கவினிடம் நேரடியாக சாக்சி கூறினார்.

ஆனால் அதனை கவின் பொருட்படுத்தவில்லை. இதனால் அப்செட்டான அபிராமி ஷெரினிடம் சென்று தனது வருத்தத்தை தெரிவித்துக் கொண்டிருந்தார். அங்கு கவினும் இருந்தார். அப்போது வெளிப்படையாகவே தனது க்ரஸை வெளிப்படுத்தினார் அபிராமி.

சரவணன் மீனாட்சி சீரியலை கவினுக்காகவே தான் பார்த்து ரசித்துள்ளதாகவும் தான் கவினின் தீவிரமான ரசிகர்  எனவே உன் மீது எனக்கு க்ரஸ் உள்ளது என்றும் அபிராமி கவினிடம் கூறினார். ஆனால் கவினோ எனக்கு ஷெரின் மீது தான் க்ரஸ் சொல்லி காமெடி செய்தார்.

இதனால அதிர்ச்சி அடைந்த அபிராமி முகம் சுருங்கியது- பிறகு இருவரும் தனியாக சந்தித்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது தான் உன்னை விரும்புவதாக கவினிடம் மீண்டும் அபிராமி கூற இரண்டாவது நாளே எப்படி இதெல்லாம் சாத்தியம் என்று கவின் கூறினார்.

ஒரு 15 நாள் போகட்டும் அதன் பிறகும் உனக்கு இதே பீல் இருக்கிறதா என்று பார்ப்போம் என்று கவின் கூற அதை கேட்டு அபிராமி கலங்கிவிட்டார். இதனால் பிக்பாஸ் வீடு எமோசனல் ஆனது.