சென்னை: பிக் பாஸ் அபிராமி, இளைஞர் ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.
பிக்பாஸ் அபிராமியுடன் நெருக்கமாக இருக்கும் இன்னொரு இளைஞர்! லீக்கான புகைப்படம் வைரல்!
விளம்பர மாடலான அபிராமி தற்போது பிக்பாஸ் தமிழ் டிவி நிகழ்ச்சியின் 3வது சீசனில் பங்கேற்றுள்ளார். நிகழ்ச்சியின் தொடக்கத்தில் கவினை காதலிப்பதாகக் கூறிய அபிராமி பின்னர் முகேனுடன் நெருங்கிப் பழக தொடங்கினார்.
ஆனால், அவரை ஏற்றுக் கொள்ள முகேன் மறுத்துவிட்டார். இது பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்ப்பவர்களுக்கு தெரிந்த கதை.
ஆனால், அபிராமி வேறு ஒரு இளைஞருடன் நெருக்கமாக இருப்பது போன்ற புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாக தொடங்கியுள்ளது. அந்த புகைப்படத்தின் மேலே, ''U are mine. Happy Birthday forever,'' என எழுதப்பட்டுள்ளது.
இதை வைத்து பார்த்தால், அபிராமிக்கும், அந்த நபருக்கும் இடையே நெருக்கமான உறவு இருக்கலாம் என சமூக ஊடகப் பயனாளர்கள் குறிப்பிடுகின்றனர். எனினும், இந்த புகைப்படத்தை வெளியிட்டவர் யார் என்று தெரியவில்லை.