வெளியேறிய அபிராமி! நொறுங்கியதை ஒட்டும் முகைன்.

பிக் பாஸ் வீட்டில் இருந்து ஏற்கனவே மதுமிதா மன உளைச்சலினால் தவறான முடிவை எடுத்த காரணத்தினால் வெளியேற்றபட்டதை அடுத்து,


இந்த வாரம்.எலிமினேஷன் இருக்காது என நினைத்து இருந்த வீட்டின் ஹவுஸ் மேட்டிற்க்கு கதிகலங்க வைத்துள்ளது கமலின் இந்த அறிவிப்பு, லேசான அதிர்ச்சியை ரசிகர்கள் மத்தியிலும் உண்டாக்கியது.

இந்த நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் தாங்கள் எதற்கு வந்தோம் என தெரியாமல், உணர்ச்சி வசப்படுவதால், சத்தம் ஒருக்கட்டத்தில் ஓலமாக மாறுவதாக சாடினார்.

மேலும் கவின், லாஸ், அபி மற்றும் முகைன் என நால்வர் தேர்வாகிருந்த நிலையில் கவின் லாஸ் காப்பாற்றபட அடுத்த முகைன் - அபி இருவரில் ஒருவர் நிடிப்பதாக கமல் சொன்ன போது,

சற்றும் எதிர்ப்பாராதவிதமாக அதில் அபிராமி பெயர் வர இதுவரை அவர் அழுது புலம்பிய  நிலையில் இன்று வெளியேறும் போது கூட எந்த கலக்கமும் இல்லாமல்,

சிரித்தபடி , லாஸ் மற்றும் செரின் என இருவரும் அழுத போது கூட அபி அவ்வளவு மெச்சூரிடியோடு நடந்துக்கொண்ட விதம் கமல் உட்பட பாராட்ட செய்துள்ளது.

மேலும் அபி வழக்கம் போல மெடலை வெளியேறும் போது போட்டு உடைக்க ,சிதறிய துண்டுகளை அவ்வளவு ஏக்கத்துடன் பார்த்த காட்சிகள் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது